பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

கவிதையும் வாழ்க்கையும்



ஒருகை பள்ளியொற்றி ஒருகை
முடியொடு கடகம் சேர்த்து கெடிதுகினந்து'

(முல்லை. 75-76)

நிற்கும் பாசறையின் இரவிடைப் போர் வாழ்க்கை சிறப்பதை விளக்குகின்றது இப்பாடல். இப் பத்திலே இதுவே மிகச் சிறிய பாடல் எனினும், நானிலத்தில் ஒரு நிலமாகிய முல்லை நில வாழ்க்கையையும் போர்க்களத்து இரவு வாழ்க்கையையும் காட்டுவதோடு பிரிந்தோர் உள்ள அசைவுகளையும் எண்ண அலைகளையும் இது நன்கு எடுத்துக் காட்டுகின்றமையின், இதுவும் வாழ்விலக்கியங்களோடு வைத்து எண்ணப்பட்டது போலும்! மக்கள் உள்ள நிகழ்ச்சியைத் தெள்ளத்தெளியக் காட்டுபவன் வாழும் கவிஞன் அல்லனோ!

இனி, அடுத்துள்ள குறிஞ்சிப்பாட்டு வாழ்க்கையை விளக்கும் முறை தனிப்பட்டது. அதன் ஆசிரியர் கபிலர், நாடறிந்த நல்லபு லவர். அவர்தம் பாடல்கள் பலவற்றைப் பின்னர்க் காண இருக்கின்றோம். ஆகவே, இங்கு இந்நூல் பற்றிச் சில அறிந்து மேலே செல்வோம். இந்நூல் தமிழ் அறியா ஆரிய அரசன் பிரகத்தனத் தமிழறியத் தூண்டும் வகையில் அமைந்த பாட்டென்பர். அவர் வழி அவன் தமிழறிந்தானோ என்பதை நாமறியோம். எனினும், அவர் இப்பாட்டின் மூலம் அவனுக்குத் தமிழில் பற்று ஏற்படும்படி செய்திருப்பார் என்பது உண்மை. தமிழர் வாழ்வின் அடிப்படையாயமைந்த களவுச் சிறப்பாகிய குறிஞ்சி ஒழுக்கத்தை நிலைக்களனாக அமைத்து இதைப் பாடியுள்ளார் அவர். அவர் 'குறிஞ்சிப் புலவர்' என்றே சிறக்கப் போற்றப் படுகின்றார். அகப்பாட்டில் வரும் குறிஞ்சித்திணைப் பாடல்கள் பலவும் அவர் பாடல்களேயாம். அவர் பிற பாடல்களைக் காட்டிலும் குறிஞ்சிப்பாடலையே அதிகமாகப் பாடியுள்ளார். இப்பாடலில் கபிலர், குறிஞ்சி வாழ்க்கையை அப்படியே எடுத்துக் காட்டுகின்றார். களவுப் புணர்ச்சியினால் தலைவியின் உடலில் மாறுபாடுகள் தோன்ற, அவள் நிலைமை அறியாச் செவிலி வேலனை வினாதலும், தோழி அந்நிலை விலக்கி, தலைவி களிறுதரு புணர்ச்சியால் கணவனைத்