பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எட்டுத்தொகை

301


புலவர் பற்பலர் இவை வாழ்வோடு பொருந்தியவற்றை யெல்லாம் காட்டி, எத்தனையோ நூல்களை இயற்றியுள்ளனர். ஆகவே, நாம் இங்கு அதிகமாக அவற்றைக் காணாது, ஒரு சிலவற்றில் வாழ்க்கை பொதிந்துள்ளதைப் பார்த்து, மேலே செல்லலாம். முதலில் அகப்பொருள் பற்றிய நூல்களைத் தொகுத்துக் காண்போம்:

தமிழர் வாழ்க்கை களவில் தொடங்குகின்றது. தனி இடத்தே தலைவனும் தலைவியும் காண்கின்றனர்; கூடுகின்றனர்: மகிழ்கின்றனர். இம்மகிழ்ச்சியை விளக்கும் பாடல்கள் பலப்பல. தலைவன் பகலிலும் இரவிலும் வந்து தலைவியைக் கூடிச்செல்வதும் பிறவும் விளக்கும் பாடல்களே குறிஞ்சிப்பகுதியில் மிக்குள்ளன. அக்காலத்தில் தலைவியின் நிலைகண்டு பெற்றோரும் பிறரும் அவளுக்கு மணம் பேச நினைக்கின்றனர். ஆனால், அவளோ, கற்புடைச் செல்வியாதலின், அங்கு வீட்டில் இருப்பதைக் காட்டிலும் கணவனேடு உடன்போக்கில் செல்ல ஒருப்பட்டு எழுகின்றாள். செல்லும் வழியிலே கொடிய சுரம் உள்ளது. அதைக் கடத்தல் எளிதன்று. எனினும், காதல் வழிக் கட்டுண்ட இருவருக்கும் அக் கொடிய சுரமும் தண்ணென்றாகின்றது. தலைவன் வாயிலாக, வெவ்விய பாலை தலைவியின் நினைவில் தண்ணென்றிருந்த தென்பதனை,

'நெடுங்கழை முளிய வேனில் நீடிக்
கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின்
வெய்ய வாயின முன்னே; இனியே,
ஒண்ணுதல் அரிவையை உள்ளுதொறும்
தண்ணிய வாயின சுரத்திடை யாறே'

(ஐங்குறுநூறு 388)

என்று விளக்குகின்றார் புலவர். முன்னெல்லாம் வெய்ய வாயிருந்த அந்தச் சுரங்கள் அவன் காதலால் கட்டுண்டு காதலியைக் காணச் செல்லும்போது, அவளை நினைத்துக் கொண்டே செல்லுதலான், தண்ணென்றிருந்த தென்கின்றான். இந்த நிலையிலேதான் தலைவியும் உடன்போக்கில் வரும் எந்த