பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கவிதையும் வாழ்க்கையும்


வேறுபாடற்ற ஓர் உலகைக் காண்கின்றார். அதை இன்று வாழ்ந்த பாரதியார், ‘காக்கைக் குருவி எங்கள் சாதி; நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்,’ என்று எல்லாருக்கும் எளிமையில் புரியும் வகையில் கூறிவிட்டார். கவிஞன் வாழ்க்கையே அதுதான்.

நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் நம்மைவிட்டு நீங்க வேண்டும் என நாம் நினைத்தோம்; அமைதிப் போரிட்டோம்: வெற்றி கொண்டோம். அவர்களும் நீங்கி விட்டார்கள். ஆனால், அவர்கள் நாட்டுக் கவிஞர்களாகிய. ஜெகப்பிரியரும், மில்டனும், கீட்ஸும், ஒர்ட்ஸ்வொர்த்தும் இந்திய மண்ணில் நிலைபெற்று விட்டார்கள் அவர்களையும் வேண்டாவென்று எந்த் இந்தியனவது கூறுவான? மொழிவெறி காரணமாக ஆங்கிலம் வேண்டாவென்று பேசப்படினும், அந்த் எண்ணத்தின் ஆழ்ந்த உள்ளத்தடத்தில் தங்கிய இப்புலவர்கள்- கவிஞர்களை-நாட்டை விட்டு ஒட்ட முடியுமா? வடக்கும் தெற்கும் வாதாடி வழக்காடும் இன்றைய நிலையிலேயும் கவிஞர் தாகூர் பொன்மொழிகளைப் போற்றாத தமிழன் இருக்க முடியுமா? அதைப்போன்றே, வள்ளுவர் பெருமையை வெளிப்படையாகப் புகழாவிடினும் உள்ளத்தில் எண்ணிப் பார்க்காத வடநாட்டு நற்புலவன் ஒருவனும் இருக்க மாட்டர்னே! எண்ணிப் பார்ப்பின், கவிஞன் எப்படி உலகை ஒன்றுபடுத்துகிறான் என்பது புலனாகும்!

மேலை நாட்டிலே நடந்த முதற்பெரும் போரிலே ஜெர்மனியும் இங்கிலாந்தும் எதிரிகளாய் நின்றன. இங்கிலாந்திலிருந்த ஜெர்மனியரும், ஜெர்மனியிலிருந்த ஆங்கிலேயரும் சிறைப்பட்டனர். ஆனல், ஜெர்மனி நாட்டுக் கலைப் பொக்கிஷமாகிய ‘கதே’யின் கவிதைகளை ஆங்கில நாட்டில் யாராவது சிறையிட்டனரா? அதைப்போன்றே ஆங்கிலக் கவிஞர் தம் கற்பனை ஓவியங்களை மாற்றார் நாட்டில் சிறை வைத்தனரா? இல்லையே! எனவே, போரும் பொருமையும் கொந்தளிக்கும் நாடுகளிலுங்கூட, அமைதியையும் ஒற்றுமையையும் நிலைநாட்ட முயல்பவராகிய