பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையும் கவிஞனும்

31


கவிஞர்தம் கவிதைகள் நிலைபெற்று வாழ்தல் ஒருதலையன்றோ? ஆம்! அக்கவிதைகள் நல்ல உள்ளத்தில் உருவான உயர்ந்த கவிதைகளாய் இருந்தால்தான் இந்தநிலையில் வாழும் என்பதை மறந்துவிடக் கூடாது.

இவ்வாறு அனைவர் உள்ளத்தையும் கட்டிப் பிணிக்கும் ஆற்றலைக் கவிஞன் எங்குப் பெற்றான்? எவ்வாறு பெற்றான்? அதற்காக அவன் எங்கும் ஒடியாடவில்லை. அவன் உள்ளமே அவனுக்கு அதைத் தந்தது. உலகை அவனுக்கு உணர்த்தும் வகையில் உணர்த்திற்று. அவ்வுணர்ச்சி பாட்டாக ஊற்றுப் பெருக்கெடுத்தது. அதுவே யாதொரு வேறுபாடுமற்ற வகையில் அனைவர் உள்ளத்தையும் மகிழ்வித்தது. இந்த உலகில் வாழும் மக்களுக்குத் தேவையெல்லாம் ஒரு வேளை கிடைக்காமல் இருக்கலாம். ஆனல், கவிஞன் காட்டும் உலகத்தில் மனிதன் தன் தேவைகளைக் கட்டாயம் பெற்றே தீருவான். கவிஞன் காட்டும் கவிதைக் கண்ணுடி இயற்கையின் தோற்றத்தை எழிலுற மக்களுக்குக் கரட்டுகின்றது. அக்காட்சி எல்லா மக்களின் மனத்துக்கும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. அதேைலயே உலகம் அத்தகைய நல்ல கவிஞர்களை நாடிடையிட்டும், தேயமிடையிட்டும், காலமிடையிட்டும் ஒடிச் சென்று பற்றிக்கொள்ளுகின்றது.

வெள்ளத்தைக் கவியாகக் கண்ட கம்பரை விட்டுச் சற்று விலகிச் சென்றுவிட்டோம். மறுபடியும் அவரைக் காண்போம். அவர் காட்டும் சூரியனை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். நாள்தோறும் நம் கண்முன் தோன்றி மறையும் சூரியன், அவரது கவிதைக் கண்களுக்கு ஒர் உயரிய உண்மையை உணர்த்துகின்றன். அவ்வுணர்ச்சி பாட்டாக உருப்பெற்று வருகின்றது. அப்பாட்டு இதுதான்:

"துறக்கமே முதல வாய
தூயன யாவை யேனும்
மறக்குமா நினையல் அம்மா
வரம்பில தோற்ற மாக்கள்