பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கவிதையும் வாழ்க்கையும்


இறக்குமா றிதுவென் பான்போல்
முன்னை நாள் இறந்தான்; பின்னுள்
பிறக்குமாறு இதுவென் பான்போல்
பிறந்தனன் பிறவா வெய்யோன்.”

இதில் கம்பர் கண்ட காட்சி என்ன? நமக்கு அவர் காட்டியது என்ன? நாள்தோறும் தோன்றி மறையும் சூரியனை வைத்து, நம் வாழ்வையே தெளிய வைத்துவிட்டார் அவர். சூரியன் தோன்றுவதுமில்லை; மறைவதுமில்லை. அவன் நின்ற இடத்தில் நிலையாக நிற்கிருன். உலகம் சுழல்கின்றது. இரவு பகல் உண்டாகின்றன. இதையே பிறவா வெய்யோன் என்றார். ஆயினும், அவன் பிறந்து மறைவது போலக் காட்டுகின்றானே! அதன் கருத்தென்ன? உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்ற வள்ளுவரின் கருத்தை ஒட்டிக் கதிரவன் தோற்ற மறைவுகளுக்குரியதாக ஒரு நீதியைப் புகட்டுகின்ருர் கம்பர். வெய்யோன் பிறந்து மறையாதவன். அதுபோன்று, உயிரும் பிறந்து மறையாத ஒன்றுதான். எனினும், அவன் தோன்றி மறைவதைப் போன்று. உயிரும் பிறந்து மறைவதைப் போன்ற நிலையிலே உழல்கின்றது. எல்லையில்லாத உயிரினம் இறந்து மறைவதைப் போன்று. முன்னுள் மாலையில் மறைந்த அந்தச் சூரியன், அவ்வுயிர்கள் மறுபடியும் பிறப்பதைப் போன்று மறுநாள் தோன்றினாள் என்று உயிர்த்தோற்றம் ஒடுக்கமாகிய ஒர் உயரிய நிலையினை, அவர் கவியுள்ளம் அக்கதிரவனது அன்ருடச் செயல் முறையில் கண்டது என்றால், அக் கவிஞரைப் போற்றாதிருக்க முடியுமோ!

கம்பர் ஞாயிற்றைக் கண்ட வகையிலே சங்க காலப் புலவன் திங்களைக் காண்கின்றன். நாள் தோறும் நாம் காண்கின்ற அதே திங்கள்தான். அது திங்கள் தோறும் வளர்ந்தும் குறைந்தும், மறைந்தும் தோன்றியும் வரும் அதே முறையை உடையதுதான். நாம் அதைக்கண்டு ஏதோ நாளைக் கணக்கிட்டு மறந்து விடுகிருேம். சிலர் அதைப் பற்றியுங்கூடக் கவலையுறுவதில்லை. ஆனால், புலவன் அப்படிக் காணவில்லை; திங்களின் ஒவ்வொரு செயலும் அவனுக்கு