பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

கவிதையும் வாழ்க்கையும்


உலகம் இன்ப துன்பம் நிறைந்த வாழ்வை உடையது. அனைத்திலும் இனிமையைக் கண்டுகொண்டே வாழ்வதுதான் அறிவுடைமை; துன்பத்தில் மாழ்குதல் சிறந்ததன்று. துன்பத்திலும் இன்பம் காண்பதே அறிவுடைமை என்ற மிகப்பெரிய உண்மையைப் பக்குடுக்கை நன்கணியார் என்ற புலவர்,

'ஓரில் நெய்தல் கறங்க, ஒரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பணிவார் புறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பிலாளன்!
இன்னா தம்மஇவ் வுலகம்:
இனிய காண்கிதன் இயல்புணர்ந் தோரே."
(புறம். 194)

என்று கூறுகிறார்.

இவ்வாறு உலகத்தின் நிலையைக் காஞ்சியாலும் பிறவற்றாலும் விளக்கி, அதனல் துறந்து வாழாது சுகித்து வாழ்தலே கடன் எனப் புலவர் பலர் உணர்த்துகின்றனர். மேலே மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனர் உணர்த்திய வாழ்வைக் கண்டோம். அதே வகையில் அவரே இங்குப் புறநானூற்றுப் பாட்டில்,


‘வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த
இரவல் மாக்கள் ஈகை நுவல
ஒண்தொடி மகளிர் பொலன்கலத் நேந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி பெறும!’ (புறம். 24)

என்று போற்றுவது காணத் தக்கதாகும். இவ்வாறே பலவகை உலக இயல்புகளையும் அதில் வாழவேண்டிய வகைகளையும் பாடிய புலவர் பல்லோர்.

‘ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவ தன்றிவ் வுலகத் தியற்கை.’ (புறம். 76)