பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எட்டுத்தொகை

321


பாட்டும், பூதப்பாண்டியன் தேவியார் தீக்குளித்தப் பாட்டும், ஆதிமந்தியார் போன்ற செல்வியர். பாடலும் நமக்கு அரசர் பரம்பரையிலும் புலவர் உள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. அப்புலவருள் ஒருவர் இளம்பெரு வழுதியார். அவர் உலகம் வாழ வழி காண்கின்றார் இன்றும் அவரைப் போலக் காண விழைபவர் உள்ளனர். ‘தமக்கென வாழாப் பிறர்க்குரியாளரே’ உலகை வாழ வைப்பவர் என்ற உண்மையை இன்றும் நம்மிடம் வாழ்பவர்கள் காட்டவில்லையா அக்கருத்தை அவ் விளம்பெரு வழுதியார் அன்றே காட்டியுள்ளனர். அவர் காட்டும் திறனை அவர் வாக்கிலேயே காணலாம். இதோ அவர் வாக்கு.

'உண்டால் அம்மஇவ் வுலகம்! இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே: முனிவிலர்
துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்: பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்!
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.’ (புறம். 182)

இவ்வரசப் புலவரைக் காணுங்கால் பாண்டியன் நெடுஞ்செழியன் அனைத்துக்கும் அடிப்படையாகும் கல்வியைப்பற்றிக் கூறியதும் காணவேண்டுவதாகும். கல்வி அனைவரையும் உயர்த்தும் என்பதை அவன் உணர்ந்தவன். மூத்தோன் வருக என்னது, அறிவுடையோனறு அரசும் செல்லும்' என்பதை வாழ்விடைக் கண்டவன். எனவே, (கல்வியின்றேல் வாழ்க்கையில்லை", என்பதை,

‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே (புறம். 183)

என வற்புறுத்துகின்றன். பொருள் உள்ளவன் கொடுத்தும், இல்லாதவன் உழைத்தும் எப்படியும் கற்கவேண்டும் என்பது அவன் கருத்து.