பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

கவிதையும் வாழ்க்கையும்


‘வல்லா ராயினும் வல்லுந ராயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை யாகுமதி’ (புறம். 37)

என்று அறம் உரைக்கின்றார்.

மேலும், அடுத்த பாட்டிலேயே அந் நலங்கிள்ளியையே நோக்கிக் கூறுமுகத்தான் நாட்டுக்கு அறிவுறுத்தும் உண்மை சிறந்ததாகும். உலகில் ஒவ்வொருவரும் பெறும் இன்ப துன்பங்களும், வாழ்வும் தாழ்வும், பிற அனைத்தும் அவரவர் செயலால் வருகின்றன. அவ்வுண்மையறிந்து அறம், பொருள், இன்பம், மூன்றையும் ஆற்றும் வழியில் ஆற்றிப் பெறவேண்டும் என்கின்றார்; அவ்வாறு அறமறிந்து பொருள்பெருக்கி இன்பம் துய்த்தலே வாழ்வின் அடிப்படை என்கின்றார்.

'அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெருமகின் செல்வம்
ஆற்ரு மைகிற் போற்றா மையே.’ (புறம். 28)

என்பது அவர் வாக்கு.

இன்னெரு புலவர் இவர்களுக்கெல்லாம் மேலே செல்கின்றார். அவர் நல்லது செய்ய வேண்டுமென்றுதான் அறிவுறுத்துகின்றார். ஆனால், அந்த நல்லதைச் செய்ய விருப்பமின்றேனும், கெட்டதையாவது செய்யாவகையில் விட்டு விடுங்கள்' என அறிவுறுத்துகின்றார். உலக வாழ்வில் நன்மை இன்றேனும், தீமையாவது இல்லாதிருக்கட்டும் என்பது அவர் கருத்து. நரி வெரூஉத்தலையார் என்ற அப்புலவர்,

‘ பல்சான் றீவேபல்சான் றீரே!
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனில் மூப்பில் பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும்காலை இரங்குவிர் மாதோ!
நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்’