பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332

கவிதையும் வாழ்க்கையும்


532 கவிதையும் வாழ்க்கையும் வள்ளுவர். அன்பு, அறிவு, கல்வி, நாகரிகம், தவம், வாய்மை, காதல் இவை போன்ற சொற்களுக்கு வள்ளுவர் காணும் பொருள்களையும், அவர் இவற்றின்வழி விளக்கும் வாழ்க்கை நெறியினையும் அறிந்து கொள்ளுதலே குறட்கவிதைகளுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ளுவதாம். இவற்றிற்கெல்லாம் பிற தமிழ் நூலாரும் பிற மொழியாளர்களும் கொள்ளும் பொருளை நாம் அறிவோம்; நானிலமும் அறியும். ஆனால், வள்ளுவர் அந்த அளவில் இவற்றின் பொருள்களைக் காணாது, ஒவ்வொன்றையும் மக்கள் வாழ்வோடு பின்னிப் பிணைத்துப் பேசும் திறனே, அவரைத் தலைவர் ஆக்கிற்று எனலாம். ஒவ்வொன்றாகக் காணலாம்.

அன்பு, வாழ்வின் அடிப்படை இன்பம் அன்பில் விளைவது. ‘அன்பின் வழியது உயர் நிலை, என்றார் வள்ளுவர். எனவே, உயிர் வாழ்க்கை என்பதே அன்பு செலுத்துவதாகும். உலகில் உயிர் பெற்றுப் பிறந்த ஒவ்வொன்றும் அன்பின் வழியேதான் வாழ வேண்டும். இன்றேல் அது உயிர்ப்பிறவி ஆகாது. ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்கின்றோம் என்ற வாழ்க்கை அன்பாகாது. அது வாழ்வே ஆகாது என்கிறோர். கொடிய பாலைவனத்திடை வற்றல்மரந் தளிர்த்தால் யாருக்கு என்ன பயன்? யாரும் அதனால் பயன் பெற முடியாது. அதைப் போன்றேதான் அன்பு உள்ளத்திலில்லாத மக்கள் வாழும் வாழ்க்கையும் அமையும். இதை வள்ளுவர்,

'அன்புஅகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று.’ (குறள். 78)

என்கின்றார். மேலும், உயிர் நிலையே அன்பின் வழியது என்று தேற்றத்தொடு திட்டமாகக் கூறிய ஆசிரியர், அன்பற்ற உயிர் வாழ்க்கையைப்பற்றிச் சொல்கின்றவர், அந்த அன்பு இல்லாத வாழ்க்கை உயிர் அற்ற பிண வாழ்க்கையே என்கின்றார். பிணத்தை உலகம் வைத்துக்கொண்டு வாழ விரும்புகிறதா? இல்லையே! அதுபோன்றேதான் அன்பற்றவரோடு உலகம் ஒன்றி வாழ விரும்பாது. அதனுடை எலும்பும் தோலும் போர்த்த உயிரற்ற் உடலால் உலகுக்குப் பயன் என்ன? அதுபோன்றே