பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள்

339


செய்ய மாட்டார்,' என்று திட்டமாக நம்புவதன் மூலம், அம் மாறுபாட்டையும் பின்பு நீக்கி வாழ முடியும் என்பதை விளக்கவுமே இக்குறட் பாவினை அவர் இயற்றினர் என்று கொள்ளுவது பொருந்தும். உற்றவர் எனக்கொண்டவர். தமக்கு நஞ்சினையே கலந்து கொடுத்தாலும், அதனையும் உண்டு சாவாது அமைபவரே நாகரிகம் பெற்றவராவர் என்பது வள்ளுவர் கருத்து. ‘விடத்தை உண்டு வாழ முடியுமா?’ என்று கேட்கலாம். ஆம்: நம்பிக்கை இருந்தால் வாழலாம் என்று கூறுகின்றார் வள்ளுவர். இந்த நாகரிகம் இன்றைய உலகுக்குப் புரியாத ஒன்றுதான். தனி மனிதர் மட்டுமேயன்றி. சமுதாயமே ஒன்றை ஒன்று நம்பாது, ஒருவரை ஒருவர் மனத்தால் விரோதித்துக் கொடுமை இழைக்கக் காலம் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றது? மற்றும் நாகரிகம் என்றால் ஏதோ உடை உடுத்துவதும், உப்பரிகையில் வாழ்வதும், உயர்ந்தவர் என்று கருதுபவரோடு கை குலுக்குவதும், உற்றாராயினும் செல்வத்தால் தாழ்ந்தவராயின் முகம் கொடுத்துப் பேசாது ஒதுக்குவதும், அறிந்தவரையும், வறியவராயின், அறியாதார் போன்று விலக்குவதுந்தானே இன்றைய நாகரிகமென்று கொள்ளுகின்றோம். மற்றும், மனிதரினும் தாழ்ந்த நாய் முதலிய விலங்குகளை வைத்து அணைக்கும் அளவுக்குத் தன்னை ஒத்த மனிதனை நோக்காத செல்வத்தையும் நாகரிகமென்று கொள்ளுகின்றோம். எனவே, இத்தகைய நாகரிகச் சுழலில் சிக்குண்டிருக்கும் நமக்கு இந்த வள்ளுவர் காட்டும் நாகரிகம் புரியாத ஒன்றுதான். என்றாலும், இதுதான் மனித சமுதாயத்துக்கே—ஏன்?—உயிர் வாழ்கைக்கே ஏற்றது. இக் கருத்தை,

'முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்,
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்.'

என்கின்றது.நற்றிணை. எனவே, கண்ணோட்ட முடையவராய் வாழும் நாகரிகப் பண்பாட்டினரே நாகரிகமுடையவர் என்பதும், மற்றல்லாதார் யாரோ என்பதும் தேற்றம்,