பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பியங்கள்

355



‘மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வணிகன் பெருமட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ!
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ!
யாழிடைப் பிறவா இசையே என்கோ!
தாழிருங் கூந்தல் தையால் கின்னே!" (மனை. 73-80)

என்று எடுத்துக்காட்டி, அவன் வாழ்வை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றார் இளங்கோவடிகள். இத்தகைய இல்லறத்தில் வாழ்ந்த கோவலனைத்தான் மாதவியின் மையல் பிரிய வைத்தது. பின்னரும், அவன் மாதவியை விட்டுப் பிரிந்து, கண்ணகியுடன் கூடி மதுரை மாநகர் சென்று, அங்குத் தங்கும் ஒரு நாள் வாழ்க்கையில், அவர் இருவரும் இருந்த சிறப்பினையும், அவள் குவளை உண் கண்கள் குய்ப்புகை கமழக் கணவனுக்கு உணவாக்கியிட்ட சிறப்பினையும் அறிகின்றோம்.

இறுதியாகக் கோவலன் கண்ணகியை விட்டு மதுரைத் தெரு வீதிக்குச் செல்லுமுன், இருவர் கூற்றாகவும் இளங்கோவடிகள் காட்டுவது இல்லற வாழ்வைப் பற்றிய ஒரு விளக்கமாகவே அமைகின்றது.

‘இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்!
சிறுமுது குரைவிக்குச் சிறுமையும் செய்தேன்!

(கொலைக்களம். 67-68 )

என்று அவன் கழிந்ததற்கு இரங்கும் காட்சி, வாழ்வுக் காட்சியன்றி வேறு என்ன? அவன் வாழ்வில் இறுதி எல்லையில் இவ்வாறு அந்தப் பிறவியில் அவன் செய்த பிழைகளையெல்லாம் எண்ணவைத்து, அவனை உலகிலிருந்து பிரிக்கின்றார் புலவர். இதுதான் வாழ்கை நெறி. தவறு செய்யும் மனிதன் அன்றாடம் தான் செய்த தவற்றினை அந்த நாளின் இறுதியில், படுக்கையில் உட்கார்ந்துகொண்டு சிந்திப்பாயிைன், அவன் தான் செய்த அப் பிழைகளுக்காக வருந்துவதோடு, அடுத்த நாள் அப் பிழைகளைச் செய்யாதிருக்க வழி காணவும்