பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

408

கவிதையும் வாழ்க்கையும்


வாழ்கின்றது. இன்றைய பாடலில் ஆரவாரமும் வெறி யுணர்வும் அழிவு மனப்பான்மையும் இடம் பெற்றுள்ளமை யின், இது தன்னைத்தானே அழித்துக்கொள்கின்றது.

பாடல் எழுதுவதில் மட்டுமன்றி, மேடையில் ஏறிப் பேசு வதிலும், உரைநடை நூல்கள் இயற்றுவதிலுங்கூட இந்த வேறுபாட்டைக் காணமுடியும், மக்கள் உள்ளத்தில் வெறி யுணர்ச்சியையும், வேறுபாட்டு உணர்ச்சியையும் வளர்க்கும் பேச்சுக்கள் அவ்வேளையில் ஆரவாரத்தோடும் கைதட்டல் களோடும் கேட்கப்படுமேனும், சிறிது காலத்திலேயே அவை வாழ வைக்க முடியாதன என்ற உண்மை வெளியாகிவிடும், அதே, வேளையில் சமுதாய நல அமைப்பில், மக்கள் வாழ்வில் ஆரவாரமற்ற தொண்டு கலந்த சொற்பொழிவுகள், அவற்றைக் கேட்பார் ஒரு சிலரேயாயினும், அவர்வழி நாட்டுக்கு நல்ல நிலைத்த பணிகளைச் செய்யும், நூல்களும் அத்தகையனவே. நாட்டில் ஒரு சிலர் நூல்கள் பல ஆயிரக்கணக்கில் விற்பனையா யாவதற்கும் ஒரு சிலர் நூல்கள் முதற்பதிப்பும் முடியாது திண்டாடுவதற்கும் வேறு காரணம் ஆராய வேண்டா. நல்லவர் எழுதும் நூல்கள், தமக்குள் மக்கள் வாழ்வைப் பொதியப் பெற்றுள்ளன. எக்கருத்தைப் பற்றிய நூலாயினும், எந்த வகையில் அமைந்த ஏடாயினும், அதில் அமைந்த முக்கியமான பொருள் மக்கள் வாழ்க்கையொடு தொடர்பு கொண்டதாகவே இருக்கும். எழுத்தும் சொல்லும் மக்கள் வாழ்வென்னும் பொருளோடு செல்லின் என்றென்றும் வாழ்வது உறுதி என்பதோடு, அந்தச் சொல்லோவியங்க ளாகிய நூல்கள் பலராலும் நன்கு விரும்பப்பெற்று, அவற்றின் ஆசிரியர்களுக்கு வாழும் காலத்திலேயே நல்ல வளனையும் பெயரையும் தேடித் தரும் என்பது உறுதி. இந்த வகையில் இன்று எழுத்தாளர் சிலர் மக்கள் உளமறிந்து, வாழ்வறிந்து, அவர்தம் பண்பறிந்து நல்ல நூல்களை இயற்றிப் பேரும் புகழும் ஒருசேர எய்துகின்றனர். ஆனால், இந்த அடிப்படை உண்மையை அறியாத சிலர், 'வான் கோழி பொல்லாச் சிறகை விரித்தாடிருற் போன்று' ஏதோ