பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்கால இல்க்கியங்கள்

409


நூலியற்றித் தமக்கு அத்துணைச் செல்வமும் சிறப்பும் பெருக வில்லையே என்று மனம் சாம்புவர். அவர்கள் சற்று நின்று நிலைத்து கவிதை அல்லது இலக்கிய வரலாற்றை எண்ணுவார்க ளாயின்-அவை தோன்றி வளரக் காரணமாயிருந்த மக்கள் வாழ்க்கைப் பிணைப்பை உணர்வார்களாயின்-உண்மையில் கண் திறக்கப் பெற்றவர்களாவார்கள். கவிதையாயினும் சரி, அது வாழ்வோடு பிணைந்ததாயின், நெடுங்காலம் நிலைபெற்று வாழ்வது மட்டுமன்றி-வாழ்ந்து தன்னை எழுதினவனுக்குப் புகழைத் தேடித் தருவது மட்டுமன்றி-அவன் வாழும் காலத் திலேயே அவனுக்கு வளத்தையும் சீரினையும் தேடித்தரும் என்பது இதனால் நன்கு புலனாகுமன்றோ! இந்நிலை கவிதை தோன்றிய அந்த நாள் தொட்டு, இன்றுவரை நிலை கெடாது வாழ்வதைக் காண்கின்றோம்.

இன்றைய இலக்கிய உலகில் இன்னெரு வளர்ச்சி மொழி பெயர்ப்பாகும். உலக அரங்கில் பல்வேறு மொழிகளில் எழுதப் பெற்ற இலக்கியங்களில் சிறந்தனவெல்லாம் பிற மொழிகளில் பெயர்த்தெழுதப்படுகின்றன. தமிழில் உள்ள சில சிறந்த கவிதைகள் பிற மொழிகளில் பெயர்த்தெழுதப்படுவதை மேலே கண்டோம். அதைப் போன்றே, தமிழிலும் பிற மொழிக் கவிதைகளும், காவியங்களும், புதினங்களும், பிறவும் மொழி பெயர்க்கப்படுகின்றன.


'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்.
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்."


என்று கனவு கண்டார் பாரதியார். அக் கனவு ஒரளவு இன்று நனவாகி வருகின்றது என்பது உண்மைதான். எனினும், போதிய அளவு அவை செயலாக்கப்பெறவில்லை என்பது கண்கூடு. இன்று வங்க மரர்த்தி மொழிகளிலிருந்தும், ஆங்கில மொழியிலிருந்தும் மொழிபெயர்ப்பு நூல்களும், தழுவல் நூல் க. வா.-20