பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

410

கவிதையும் வாழ்க்கையும்


களும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றுள்ளும் இந்நாட்டுச் சமுதாய வாழ்க்கை நலனோடு பொருந்திய மொழி பெயர்ப்பு நூல்களே வாழ்கின்றன. அல்லன, அற்ப ஆயுள் உடையவனவாக, ஆயிரம் பிரதிகளுக்கும் வழியற்றனவாக, மறைந்து விடுகின்றன. பிற நாட்டுப் புலவர்தம் கவிதைகளின் மொழி பெயர்ப்பும் அப்படியே வாழ்ந்தும் வீழ்ந்தும் நிற்கின்றன. எனினும், இன்றைய உலகில் இலக்கியம் வளர எல்லோரும் சேர்ந்து பாடுபடுகின்றனர் என்பது மட்டும் கண் கூடான உண்மை.

இன்றைய நிலையில் இனி வரும் நாள்கள் என்னாகும் என்பதை நம்மால் எண்ணிப் பார்க்க முடியாது. அதிலும் சிறப் பாகக் கவிதை உலகில் எத்தகைய மாற்றங்கள் நேரும் என்பதைக் கூறமுடியாது. பேச்சு வழக்கும் பிறவும் அழியினும், கவிதைக் கருத்துக்கள் மக்கள் இனம் வாழும் வரையில் அழியாது என்பது உறுதி. இந்த உண்மையைத்தான் இதுவரை-வரலாறு காணுத காலம் தொடங்கி இன்று வரை-கண்டு கொண்டே வந்தோம். இவ்வாறு வரலாறு அறியாக் காலம் தொட்டுக் கவிதை ஒரு கலையாய் வளர்ந்து வாழ்வோடு பின்னிக்கொண்டே வளர்ந்து வருகின்றது. அவ்வாறு பின்னிக் கொண்டகவிதைகள், தாம் தோன்றிய மொழியும், தாம் தொடர்பு கொண்ட சமுதாயமும் மறையினும், தாம் மறையாது உலகம் உள்ளளவும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும். கவிதைக்கு மட்டுமன்றி, நிலை பெற்ற கலைகள் எல்லாவற்றிற் குமே இவ்வுண்மை பொருந்தும். எனவே, கவிதை புனைவோரும், கலைகளைச் செழிக்கச் செய்ய விரும்புவோரும், மக்கள் வாழ்வை யும் பண்பாட்டையும் பிற நிலைகளையும் கண்டு, கருத்தால் உணர்ந்து, தத்தம் கவிதைகளையும் கலைகளையும் ஆக்கு வாராயின், அவை நிலைத்து வாழ்வதோடு, அவற்றின் மூலம் அவர்களும் அமரராகிவிடுவார்கள். அந்த உணர்வில்-உலக உயிரினம் ஓங்கவே கலைகள் வாழ்கின்றன என்ற நல்ல வழியில் -கவிஞர் உலகமும் கலைஞர் உலகமும் நாட்டையும் உலகை யும், அவற்றில் வாழும் உயிரினத்தையும் என்றென்றும் ஓங்கச்