பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையும் கவிஞனும்

43


கண்களுக்கு உயர்ந்தனவாகத் தோற்றமளிக்கும். அத்தோற்றத்தைக் கவிதைக் கண்ணாடி வாயிலாக, அக்கவிஞன் நமக்குக் காட்டுகின்றான்.

அத்தகைய கவிஞன் பாடும் பாடல்கள் உயர்ந்த பொருள்கள் பற்றியனவாகத்தான் . இருக்கவேண்டு மென்பதில்லை. நல்லதைப் பாடும் அக்கவிஞன், அல்லதைப் பற்றியும் பாடத் தயங்கமாட்டான். குன்றின்மேல் நின்று எக்களித்துப் பாடும் அவனுடைய உள்ளம், குகைகளிலும் புகுந்து அங்குக் குமையும் மக்களின் கொடுமைகளையும் எண்ணிப்பாடும். அந்தப் பாடலைச் சொல்லும்போதும் அது கவிநலம் வாய்ந்ததர்கவே இருக்கும். இன்பத்தின் இனிமை கவியின் உள்ளத்தை எப்படி ஆட்கொண்டு சாகாவரம் பெற்ற கவிதையை உருவாக்குகின்றதோ, அப்படியே துன்பத்தின் கொடுமைகளும் அந்த வகையில், அவன் உள்ளத்தை உருக்கி உணர்த்துவனவாகும். இமயத்தின் உச்சியில் நிற்கின்ற எக்களிப்பில் தம்மையே பறிகொடுத்த பாரதியார்,

“ மன்னும் இமய மலைஎங்கள் மலையே:
மாநில மீதது போற்பிறி திலையே:
இன்னரு நீர்க்கங்கை யாறுஎங்கள் யாறே,
இங்கிதன் மாண்பினுக்கு எதிரெது வேறே?”

என்று இயற்கைகளையெல்லாம் போற்றிப் பாடி இன்பில் திளைக்கிறார். அதைப் போன்றே அவர் அருமைத் தமிழ் மொழியை எண்ணும்போதும் அத் தமிழ்நாட்டை நினைக்கும் போதும்,

"செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுதுஎன் காதினிலே!"

என்று இன்ப வாரிதியில் திளைக்கின்றார். அதே பரதியார் துன்பத்திலும் தம்மை மறந்து கவிதையை வாரி வீசுகின்றார்: பாரதநாட்டு மக்கள் பிற நாடுகளுக்குச் சென்று, இரப்பர்த் தோட்டங்களிலும், கரும்பு, தேயிலைத் தோட்டங்களிலும் நின்று.வாடிவாழ்விழந்து வருந்தி நிற்கும் நிலையினை எண்னும் போது.அப்படியே தம்மை மறந்துதானே.