பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

கவிதையும் வாழ்க்கையும்




“ தேயிலைத் தோட்டத்திலே—பாரத
சேய்கள் சென்று சென்றுமாய்கிறார் ஐயையோ!
நாட்டை நினைப்பாரோ,—எந்த
நாளினில் போய் அதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ—அவர்
விம்மி விம்மிவிம்மி விம்மி அழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே!”

என்று கசிந்து பாடுகிறார்! எனவே, கவிஞன் இன்பம் தரும் பொருள்களை மட்டும் பாடி, தன்னை என்றென்றும் இன்ப வாரிதியில் மூழ்கவைத்துக் கிடப்பவன் அல்லன் என்பதும், துன்பத்தைக் கண்டபோதும், தானும் துன்பத்துள் மூழ்கி அத்துன்பமேயாகிப் புலம்புவான் என்பதும் தெளிவாகின்றன. இசை வகையிலேயும் இதனாலேதான் இன்ப எக்களிப்பில் பாடுவதற்குப் பலப்பல இராகங்கள் இருப்பன போன்று, துன்பத்தை விளக்கவும் முகாரி, முதலியவாய இராகங்கள். உள்ளன என எண்ண வேண்டியுள்ளது. எனவே, எத்தகைய சூழ்நிலையிலும் தன்னை மறந்து நின்று; தான்வேறு.அப்பொருள் வேறு என்ற வேறுபாடு:அற்று.தனக்காக அன்றி, உணர்ச்சியில் கவிதை மழை பொழியும்,மேகமாய்க் கவிஞன் விளங்குகின்றான் என்பது தேற்றம்.

இவ்வாறே கவிஞனையும் அவன் பாடும் கவிதை நலத்தையும் இணைத்துப் பார்த்துக்கொண்டே செல்லின் அதற்கு நம் வாழ்நாள் போதாது. எப்பொருளையும், தன் எண்ணத்தால் சிறந்ததாக்கிப்பாடும். அப் பண்பார் கவிஞன் வாழ்ந்தால்—அவன் கவிதை வாழ்ந்தால்—உலகம்.வாழ்கிறது. பண்புடையார்ப் பட்டுண்டு உலகம், அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன், என்ற வள்ளுவர் வாக்கு இக்கவிதைப் பண்புடையார் மாட்டும் நன்கு பொருந்துவதாகும்.

இதுகாறும் கண்டவற்றால் கவி என்பது பாடல் மட்டு மல்லாது, உரைநடையும் கலந்த உயர்ந்த உணர்வு வயப்பட்ட தென்பதும், அக்கவியைப் பாடும்.கவிஞன் உள்ளத் தூய்மையும்