பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையும் கவிஞனும்

45


உயர்ந்த பண்புகளும் உடையவனாவான் என்பதும், மக்கள் கண்களுக்குச் சாதாரணமாகத் தெரியும் பொருள்கள், கவிஞன் கண்களுக்குத் தனியான உயர்வைக் காட்டி உணர்வைக் கொளுத்தி அவனைப் பாடவைக்கும் என்பதும், ஆறும் பிறவும் கவிஞனுக்கு எவ்வெவ்வாறு உவமையாக்கப்படுகின்றன என்பதும், கவிஞன் கால தேய இடை எல்லைகளைக் கடந்து யாண்டும் என்றும் நிலவி வாழ்பவன் என்பதும், இயற்கைப் பொருள்களைக் கண்ட கவிஞன் அவற்றில் தோய்ந்து அவை புகட்டும் அறநெறிகளை எவ்வெவ்வாறு அள்ளிப் பருகி மற்றவர்களுக்கும் வழங்குகிருன் என்பதும், உண்மைக் கவிதை உள்ளுந்தோறும் உயர்வடையும் ஒன்று என்பதும், குறள் ஒப்பற்ற கவிதையாய் விளங்குகிற தென்பதும், தன்னலம் கருதாது உணர்ச்சிப் பெருக்கின் வயப்படும் கவிஞனே தன் கவிதையைப் பாடுகிறான் என்பதும், கவிஞன் கைம்மாறு கருதாது உணர்வு வயத்தால் பாடுகின்றான் என்பதும், அந்நலத்துடன் அவலம் முதலிய அனைத்தையும் அவன் பாடவல்லன் என்பதும் தெளிவாகின்றனவன்றோ?