பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

3. கவிதையின் வகைகள்


விதையைப்பற்றி ஒருவாறு உணர்ந்த் நாம் அக் கவின்த யின் பிரிவுகள் பற்றியும் உணர்ந்துகொள்ளில் அவசியமன்றோ? கவிதை பாட்டிலும் உரைநடையிலும் பயில்வது என்றாலும், பெரும்பாலும் பாடலே கவிதையாகக் காண்கின்றோம்: பொருட்செறிவும் பிற இயல்புகளும் அமைவதோடு, சந்தமும் இன்சவும் பொருந்தி அமைக்கப்பட்ட பாட்ல்களில் அவை பொருந்துமாயின், கவிதை மிகவும் சிறப்பாகும் அன்றோ! எனவே, கவிதை பாடல் வழி எவ்வொவ்வாறு அமைகின்றது எனக் காணல் வேண்டும். அப்பாடல் நெறியே தமிழில் மிகப் பரந்து கிடக்கும் ஒன்றாகும்.

‘செய்யுள் இயல்’ என்பது தொல்காப்பியத்துள்ள பா நலம் குறிக்கும் பகுதி என்பதைக் கண்டோம். அதில் தொல்காப்பியர் செய்யுளுக்குப் பலவகையாக இலக்கணங்களைக் காட்டுகின்றார். அவற்றை அறியுமுன் தமிழ் நாட்டில் பாட்டிற்கு வழங்கும் பெயர்களையும், பொருள்களையும் அறிதல் அவசியமாகும். ‘செய்யுள்’ என்ற சொல் செய்யப்படும் ஒன்றற்குப் பெயராகின்றது. எழுத்து, அசை முதலிய உறுப்புக்களைக் கொண்டு, அவற்றால் ஒன்றைச் செய்து முடித்தல் செய்யுளாகும். ஆங்கிலத்தில் ‘Stanza’ என்று வழங்கும் சொல்லுக்கு நேராக இது அமைகின்றது. எனவே, செய்யப்படுவனவெல்லாம் செய்யுள்களே. சாதாரண வண்டி ஒட்டிக்கொண்டு, தன் வேலைக்கிடையிலே வேடிக்கையாகப் பாடும் வண்டிக்காரன் பாட்டு முதல், உயர்ந்த வேதாந்தப் பாடல்கள்வரை செய்யப்படுவன தாமே? எனவே, அவற்றைச் செய்யுள்கள் என்று கூறலாமன்றோ?