பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் வகைகள்

53


நூல்கள் இவ்வாறு இசை பாடவும், வசை தூற்றவும் வகுத்துக் கொண்ட வழி வியப்புக்குரிய ஒன்றாகும். எனினும், இவை காலத்தால் மிக மிகப் பிந்தியனவாதலான். இவற்றைப்பற்றி நாம் மிக்க கவலையுற வேண்டா. ஏன், நாடே இவற்றைப்பற்றிக் கவலையுறவில்லை, இந் நூல்களின் வாழ்வைப்பற்றித் தமிழ் நாட்டில் இன்று ஆயிரத்தில் ஒருவருக்குக்கூடத் தெரியாதே! நாமும் இவற்றைவிட்டு மேலே செல்வோம்.

தொல்காப்பியத்திலே இவ்வளவு திட்டமாக வரையறுத்த செய்யுட் பிரிவினைப் 'பா' என்று கூறுகின்றார். ‘பா’ என்பது என்ன? செய்யுளா? கவிதையா? பாட்டா? அன்றி வேரு? செய்யுளைப் 'பா' எனவே வழங்கினர். செய்யுளில் ஒருவகையாகிய, ‘பா’ பொருளாலும் பண்பாலும் சிறந்துள்ளதாயின், அது மக்கள் மனத்தைத் தொடும் கவிதையாயிற்று. அப்பாவே பண்ணுென்றப் பாடப்படின் ‘பாட்டு’ எனப் பெயர் பெற்றது. உரைநடையினும் பாட்டுச் சிறப்புறுதற்கு உரிய காரணம், அது பண் ஒன்ற, கருத்துக்கு மட்டுமன்றிக் கேட்பார்தம் காதுக்கும் இனிமை பயக்கும் வகையில் பாடப்படுவதே யாகும். இவ்வமைப்பு நிலை. தமிழ் நாட்டில் மட்டுமன்றி, பிற மொழி வழங்கும். நாடுகளிலும் உண்டு. ஆங்கில நாட்டில் ‘Poem, Hymn’ என வழங்கும் பாடற்ருெகுதிகள் இசையோடு பொருந்தியனவேயாம். ஆங்கிலத்தில் கவிதையாகிய பாட்டு ‘Poetry’ எனப்பெயர் பெறுகின்றது. ஒரே வகைப்பட்ட அமைவுடைப் பாட்டாயின், ‘Verse’ எனப் பெயர் பெறுகின்றது. ஒரே வகைப்பட்ட அமைவுடைய அடிகளைக் கொண்ட பாட்டு ‘Stanza’ ஆகின்றது. ஓர் இசைத்தன்மை கொண்டு வரையறுத்த அடிகளால் அமைந்து, உடன் இசை நலம்பொருந்தியபாட்டு, ‘Song’ ஆகின்றது. அந்த இசைப் பாடலே கடவுளைப் பாடுவதாக அமையின், ‘Hymn’ ஆகிறது. இந்த வகைகளும் வேறுபாடும் தமிழிலும் உண்டு. செய்யப்படுவது செய்யுள் என்பது கண்டோம், அதைப் போன்றே. பாடப்படுவது பாட்டு என்று சொல்லிவிடலாம். அடிகளால், இலக்கண முறைப்படி. கவிஞனால் ஆக்கப்பெற்ற செய்யுள்