பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

கவிதையும் வாழ்க்கையும்



‘ஞாயிறு திங்கள் அறிவே நானே
கடலே கானல் விலங்கே மரனே
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே
அவையல பிறவும் நுதலிய நெறியால்
சொல்லுக போலவும் கேட்குக போலவும்
சொல்லியாங்கு அமையும் என்மனார் புலவர்.’ (502)

என்கிறார், பவணந்தியாரும்,

‘கேட்குக போலவும் கிளக்குக போலவும்
இயங்குக போலவும் இயற்றுக போலவும்
அஃறிணை மருங்கினும் அறையப் படுமே’. (409)

என்று கூறி இதையே விளக்குகின்றார். எனவே, கவிஞன் தன் கற்பனைத்திறன் ஒன்றுக்கு மட்டுமன்றி, கவிதையின் நலன் கனிந்து விளங்கவும், நாட்டுக்கும் உலகுக்கும் உணர்த்த வேண்டியவற்றைத் தெள்ளிதிற் காட்டவும். இவ்வாறு மனிதனல்லாத மற்றையவற்றை முன்னிறுத்திப் பாடுவது இயல்பே என்பது தேற்றம். இந்த வகையில் நம் நாட்டைப் போன்றே ஆங்கில நாட்டிலும் புலவர் பற்பலர் வாழ்ந்து அவர்தம் இலக்கியத்தை வளம்படுத்தி இயற்கைப் புலவர்களாய் இன்றளவும் சாகா வரம் பெற்றுச் சிற்ப்பதை நாம் அறியோமா? ஆங்கிலத்தில் மட்டுமன்றி, வளம் பெற்ற எம்மொழியிலும் இத்தகைய கற்பனைக் கவிஞர் உள்ளனர். அவர்தம் கவிதைகளாலேதான் அம்மொழிகள் வாழ்கின்றன என்றுகூடச் சொல்லலாம். வடமொழிக் காவியங்களிலும், பிற நாட்டுக் காவியங்களிலும் இத்தகைய கவிதைச் செல்வங்கள் நிறைந்துள்ளன என்பதை அவ்வம்மொழிப் புலவரும் பிறரும் போற்றிப் புகழ்கின்றனரன்றோ?

இனி, இக்கவிதையை வேறு வகையில் கூறுபடுத்திக் காணும் வகையினையும் காண்போம். புறப்பொருள் வெண்பா மாலை என்றோர் இலக்கண நூல் தமிழில் உண்டு. அதில் இன்னின்ன சமயத்தில் வாடும் பாடல்கள், பொருள் வகையில் இன்னின்ன பெயர்களைப் பெறும் என்பது விளக்கப்-