பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் வகைகள்

55


யெல்லாம் இசைக்கு இருக்கும் தனி ஆற்றலைக் காட்டுகின்றன. அந்த இசையே, சொல்லிய பாவின் பொருள்நலம் தோன்றும் வகையில் அமைந்து, அப்பாவும் கவிதை நலமெல்லாம் கலந்த ஒன்ருய் இருப்பின், அதனினும் கவிதை இன்பம் வேறு உண்டோ?

கவிதையைக் காண எங்கெங்கோ சென்றோம். ஆனலும், அனைத்தும் கவிதையோடு தொடர்பு உடையனவே. இனி, இவ்வகையான கவிதைகளைப் பாடினால் கேட்டற்குரியவர் யார்? மக்கள் தாமே? என்ற எண்ணம் தோன்றல், இயல்பே. ஆம்! மக்கள் வாழ்க்கைக்கெனவேதான் கவிதை அமைந்துள்ளது. அதனை இல்லையென்று மறுப்பார் இல்லை. என்றாலும், கவிஞன் உள்ளம், அந்த நிலையைத் தாண்டி அப்பாலும் செல்லுகின்றது. மக்கள் மட்டும் கேட்டலைக் காட்டிலும் மற்றைய விலங்கும், பறவையும், பிறவும் கேட்டுத் துய்க்கும் வகையில் கவி அமையின், அது சிறக்கும் என அவன் எண்ணியிருப்பான். மேலும், சிலவற்றை மனிதனிடம் கூறின், மன அமைதியும் பெற இயலாது. அல்லது அவனுக்கு வேண்டாத பொருளாயின், வெறுப்பும் தோன்றுதல் கூடும். ஆகப்பொருளாகிய ஒருவ்னும் ஒருத்தியும் பெற்ற இன்பம், பிறருக்கு எடுத்துப் பேச முடியாத ஒன்றுதானே? அதையே மயிலுக்கும். குயிலுக்கும். ஒடைக்கும், பூவுக்கும் சொல்லுவது போலப் பேசி உள்ளக் களித்தல் இயல்பு என்பதை இலக்கியங்கள் வற்புறுத்துவதைத்' காண்கின்றோமன்றோ? மேலும், மனிதன் தவறி நடப்பனாயின், அவனே நேரே நிறுத்திக் குற்றங்க்ளேக் கூறிப் பழித்துத் திருத்த முற்படின், அவ்ன் வெறுப்படையானே! அவன் செயலை அஃறிணையின்மேல் ஏற்றி அறிவுறுத்தும் வகையில் விளக்கின்.அதனால் பயன் உண்டாகும். அதிலே கவிதைவழிக் கற்பனையும் பிறக்குமே! முன்னர்சி சூரியனையும், நாங்கூழ்ப் புழுவையும் முன்நிறுத்திக் கவிஞர்கள் கற்பனைக் கடலிலே மிதந்து உலகுக்குக் கவிதை வழங்கிய உண்மைகளையெல்லாம் காணவில்லையா? அந்த நிலை கவிதைக்கு இன்றியமையாத ஒன்றேயாகும். இவற்றையெல்லாம் எண்ணித்தான் போலும் ஆசிரியர் தொல்காப்பியனாரும்’