பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் வகைகள்

59


என்று பேசப்படுகிறது. இவ்வாறு பலப்பல பெயர்களில் பலப்பல பாடல்கள் அமைந்துள்ளமையை நம் தமிழ்க் கவிதைகள் விளக்கிக்கொண்டே செல்வதைக் காணலாம்.

'பாடாண் படலம்' என்றொரு பகுதி இந்நூலில் உண்டு. அதில் புலவர் பலவற்றை அரசரோடு சார்த்திப் பேசும் பகுதிகள் விளக்கப்படுகின்றன. அரசன் வாழ்வையும் வளத்தையும் புலவர்தம் கவிதைகள் பல்வேறு வகைகளில் போற்றியிருக்க வேண்டும். அவற்றையெல்லாம் ஒவ்வொரு பெயரால் தனித்தனியே பாகுபடுத்திக் காட்டியுள்ளார் ஆசிரியர். மன்னன் மணத்தைப் பாடுவது ‘மன. மங்கலம் என்னும் பெயரை உடையது. மன்னனிடம் .செல்லுமாறு பாணனுக்கு வழிகாட்டுவது ‘பாளுற்றுப்படை’ ஆகின்றது. மன்னனுக்கு அறிவுறுத்தும் பகுதி ‘செவியறிவுறுஉ’ ஆகின்றது. மன்னவன் நாடு செழிக்க மழை வளம் உண்டாகும் எனப் பாடுவது ‘வெள்ளி நிலை’யாய் விளங்குகிறது. இப்படி எத்தனை எத்தனையோ வகைகளில் கவிை தகள் பொருள் நோக்கிப் பிரிக்கப்படுகின்றன. இப்பிரிவுகள் தொல்காப்பியப் புறத்திணையியலில் ஒருவாறு குறிக்கப்பட்டனவே எனினும், வெண்பா மாலை தனித்தனியாகக் கொளு அமைத்து, உதாரணப் பாட்டையும் காட்டி விளக்கும் வகையில் இலக்கணத்தையும் இலக்கியத்தையும் இயைத்துச் செல்லுகிறது.

புறப்பொருள்பற்றி மட்டுந்தான் இந்தப் பெயர்கள் என்று எண்ண வேண்டா. அகப்பொருள் பற்றிய பாடல்களிலும் இத்தகைய பிரிவுகள் உள்ளன. அகமும் புறமும் ஒன்றை ஒன்று பாடல் வகைகளில் ஒத்தே செல்கின்றன. திணையும் துறையும் இருவகைப் பாடல்களுக்கும் உள்ளன . தொல்காப்பிய்த்தே அகத்திணையியலிலும், கள்வியலிலும், கற்பியலிலும் இப்பிரிவுகள் பேசப்படுகின்றன. பிற்காலத்து எழுந்த ‘கோவை’ என்னும் பிரபந்தமே இத்துறைகள் அடிப்படையில் அமைந்த நூல்தானே? பாண்டிக்கோவையும், சிற்றம்பலக்கோவையும், பிற கோவைகளும் நாட்டில் நல்ல இலக்கியங்களாகப் போற்றப்படுகின்றன. அவை ஒரு