பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

நூல்பற்றி...

‘மலரினும் மெல்லிது காமம்,’ என்ருர் வள்ளுவர். அக் காமத்தோடு தொடர்பு கொண்டுள்ள வாழ்க்கையும் அத்தகையதே. காமத்தின் "செவ்வி தலைப்படுவார் சிலர் என்ருர் அவர். அதே போலத்தான் வாழ்க்கையின் செவ்வியில் தலைப்பட்டு அதை உணர்ந்து துய்ப்பவர்களும் உள்ளார்கள். பரந்த உலகில் வாழ்க்கை நிறைந்திருந்த போதிலும், அதன் அமைப்பையும், கூறுபாடுகளையும், அடிப்படையினையும் அறிந்து, வாழ்வாங்கு வாழ்பவர் ஒரு சிலரே யாவர். அவருள்ளும் ‘தாம் பெற்ற இன்பம் வையகம் பெறுக,’ என்ற நல்ல உள்ளத்தோடு உலக வாழ்வினை உள்ளத்துள் உணர்ந்து அதைப் போற்றுவார் ஒரு சிலரே! அச் சிலருள் அவ்வாழ்வைக் கவிதையாக்கி உலக மக்கட்கு வழங்குபவரே கவிஞராவர்.

மலர்ச்செடிகள் காடுகளில் நிறைய உண்டு. ஆனால், அவற்றைக் கண்டு போற்றுபவர் யாவர்? முள்ளும் கல்லும், செடியும் கொடியும் நிறைந்த காட்டுக்குள்ளும் மலர் கண்டு கவி பாடுபவர் ஒரு சிலரே. அம் மலரைப் பார்த்து அதன் நலன் துய்ப்பாரையும் காணல் அரிது. ஆனால், அம்மலர்ச் செடிகளையும் கொடிகளையும் செம்மையாக வீட்டிலும் தோட்டத்திலும்—தேவையாயின் பூந்தொட்டிகளிலும் வளரவைத்து-அவற்றில் பூக்கும் மலர்களைக் கண்டும் பயன்படுத்தியும் துய்ப்பவர் பலராவர். தேன் உண்ணும் வண்டுகள், அப்பூக்களில் தேனை உண்ண வரும் காட்சியும் ஒரு சிறந்த