பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VI

காட்சியாகும். கவிஞன் அதே நிலையில் வாழ்வினை — செம்மைப் படுத்தப்பட்ட வாழ்வினை - சிறந்த காதல் வாழ்வினை - அதன் அடியாகப் பிறக்கும் அற வாழ்வினை - அழகுபடத் தன் கவிதையில் காட்டுகின்றான். நல்ல கவிதையும் வாழ்வும் பிரிக்க முடியாதன. இந்த அடிப்படையில் எழுந்ததே இந்நூல்.

தொல்காப்பியனர் காலந்தொடங்கி இன்று வரை தமிழில் எத்தனையோ கவிதைகள் - இலக்கியங்கள் தோன்றின. ஆயினும், அவையனைத்தும் வாழவில்லை. வாழ்வோடு பொருந்திய மெய்க் கவிதைகளே சிறக்க வாழ்கின்றன. இந்நிலை உலக மொழிகளிலுள்ள க வி தை க ள் அனைத்துக்கும் பொருந்தும். கவிதையும் வாழ்க்கையும் பிறந்து வளர்ந்த வரலாற்றையும், அவை இணைந்து வாழும் வாழ்க்கை முறையையும் இந்நூலில் ஒல்லும் வகை காட்டியுள்ளேன். தமிழ் வளர்ச்சிக்கு இந் நூல் சிறிதே உதவக் கூடும் என நம்புகிறேன். நல்லார் கண்டு நலமுளதேல் கொள்ள வேண்டுகிறேன்.



தமிழ்க்கலை இல்லம்,
சென்னை -30
31-1-63

அ. மு. ப