பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் வகைகள்

65


பாடம் கற்பிக்க வேண்டியும், தமது ஆசு கவித்திறனை அறிய வாய்ப்பளித்தும், அவர் சொன்ன முதலும் ஈறும் மாற்றாத வகையில், கொண்ட பொருளும் பொருந்தும் முறையில் வெண்பாவினைப் பாடினர்.

‘மன்னும் அருணகிரி வாழ்சம்பந் தாண்டாற்குப்
பன்னு தலைச்செளளம் பண்ணுவதேன்?-மின்னின்
இளைத்தஇடை மாதர் இவன்குடுமி பற்றி
வளத்திழுத்துக் குட்டா மலுக்கு."

என்ற பாடலே அது. இப்பாடல் ‘மன்’ என்று தொடங்கி ‘மலுக்கு’ என முடிகின்றது. அவருடைய செயலையும் இதில் காணலாம். எனினும், பாட்டிலே அவர் கர்வம் அடங்கும் வகையில், அவர் சிகை நீக்கப் பெறுவது, மகளிர் அவர் தலை மயிரைப் பற்றி இழுத்துக் குட்டாமலிருப்பதற்கே என்று கூறி யிருப்பது அவரை வெட்கப்படச் செய்திருக்குமன்றோ! எப்படியோ அவர் கர்வத்தை அடக்கினதோடு, காளமேகம் தாம் ஆசுகவி என்பதையும் நிலைநாட்டிக் கொண்டார். இது போன்று எத்தனையோ இடங்களில் காளமேகத்தின் ஆசுகவித் தன்மை புலப்பட்டிருக்கின்றது.

காளமேகம் மட்டுமன்றி, இன்னும் எத்தனையோபுலவர்கள் அன்றுதொட்டுஇன்று வரையில் தமிழ் நாட்டில் ஆசுகவிகளாக வாழ்ந்திருக்கின்றார்கள். அவர்கள் தங்கள் கவி நலத்தையெல்லாம் விழலுக்கிறைத்த நீராக்கி, பயன் பெறாதபடி செய்து விட்டார்கள் எனலாம். அவர்கள் தங்கள் திறனைப் பற்றித் தருக்கி, சொல்லுவார் சொல்லுகிறபடியெல்லாம் தனிப் பாடல்களைப் பாடி, தமிழ் நாட்டுக்கு என்றென்றும் பயன்படக்கூடிய இலக்கியத் துறையில் கருத்து வையாது ஏதோ வேடிக்கையாகக் காலம் கழித்துவிட்டார்கள் என்பதுதான் பொருந்தும். கவி பாடுவது மேலே நாம் கண்டது போன்று பெரிதும் இயல்பாக அமையும் பண்புதான். அப்பண்பு சிறக்கும் காலத்து, இது போன்று, ஆசு கவிகள் பாட அவர்களுக்கு வாய்ப்பு வரலாம். பாவம்! அந்த வாய்ப்பினை நல்ல முறையில் வாழ்வுக்-