பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

கவிதையும் வாழ்க்கையும்


ஆங்கிலத்திலே ஒரு பேரறிஞர் ‘அறிவற்ற கவிதைகள்’ என்றே ஒரு நூல் எழுதியிருக்கிறார், அதில் இக் கவிதைத் தொகுதியைப்பற்றி அவர் நன்கு விளக்குகின்றார். உயர்ந்த கவிதைகளாகிய பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பரவி வாழும் இந் நாட்டிலும், அவர் அந்த நாட்டில் காணும் பல பயனற்ற கவிதைகள் என்று காட்டி வகைப்படுத்தும் கவிதைகளும் வாழ்ந்துதான் வந்துள்ளன். அக் கவிதை வரிசையில் அவர் நாம் மேலே கண்ட சினிமாப் பாடல்கள் போன்றவற்றையும், நாடோடிப் பாடல்களையும் சேர்த்துள்ளார். இன்னும் நிந்தைப் பாடல்களாகவும், பழிப்பது போலப் புகழ்தலும், புகழ்வது போலப் பழித்தலும் முதலாய பாடல்களும் இத் தொகுதியில் சேர்க்கப்பட்வேண்டுவனவே எனக் காட்டுகின்றார். பூதக் கதைகள், விலங்குக் கதைகள் பற்றிய பாடல்களும் இவ்வகையினவே. இன்னும் நம் நாட்டில் வழங்கும் தேசிங்குராஜன் கதை, அல்லி அரசாணி மாலை போன்ற பாடல்களும் இந்தப் பிரிவில் அடங்கும் போலும்!

கிராமியப் பாடல்களும் கிழவிப் பாடல்களும், ஜாதகக் கதைகளைப் பற்றிய பாடல்களும், குழந்தைப் பாடல்களும், பொருளே அறிய முடியாத வெற்றொலிப் பாடல்களும், பிறவும் இவ் வினத்தில் சேர்ந்தனவே எனக் காட்டுகின்றார் அவர். இப் பாடல்களையெல்லாம், கவிஞர் உலகம் ஒருவேளை பாடல்கள் அல்ல என்று தள்ளிவிடலாம். எனினும், உலக மக்களுள் பெரும்பாலார், இவற்றைத் தம்மை மறந்து பாடும் கருத்தென்ன? சினிமாப்பாடல்களுள், இவ்வாறு வரையறையற்ற கவிதைப் பண்புக்கு அப்பாற்பட்டதாகக் கொள்ளப்படும் பாடல் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகை கொடுத்துப் பாடவைத்துத் தம் படத்தில் சேர்க்க முதலாளிகள் முன் வருவானேன்? ஆம்! அடிப்படை ஒன்றேதான். இக் கவிதைகள் இலக்கண வரம்பின் எல்லையில் இல்லையாயினும், இவை மக்கள் உள்ளங்களைத் தொடுவன. அவை தாமே உண்மைக் கவிதைகளாக முடியும் என்று மேலே கண்டோம்? எனவே, இவ்வாறு வேடிக்கை கலந்த ஆனால் மதுரம் செறிந்த