பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் வகைகள்

69


பாடல்களை மதுரகவி என்று. கொண்டார்களோ என எண்ணவும் கூடும்.

இத்தகைய வேடிக்கைப் பாடல் பாடுவதற்கும் அறிவு தேவை. அதை யார் வேண்டுமானலும் பாடிவிடலாம் என்று நினைப்பதும் தவறு என்று ஆசிரியர் எமிலி(Emile) தம் நூலில் சுட்டிக்காட்டியிருக்கிறார். தம் சொல்லோ, கிருத்தோ, பாட்டோ, பிறவோ மற்றவர் விரும்பி ஏற்க வேண்டுமாயின், அவ்விருப்பத்தைத் தூண்டக்கூடிய ஆற்றல் ஒருவரிடம் அமைவது எளிதன்று. அதிலும், பொது மக்களின் பாடல் என்று சொல்லத்தக்க வகையில். கேட்போர் உள்ளத்தையும் உதட்டையும் பிணிக்கும் வகையில், பாடுவது எளிதன்றே! தந்தனப் பாட்டு என்று சாதாரணமாக அப்பாடல்களை அறிவுடையார் பேசினலும், அவை பலரைத் தம் வசப்படுத்து வானேன்? அறிஞர்கள் இதுபோன்ற கவிதைகளைக் கள்ளுக்கு ஒப்பாகக் கூறுவார்கள். கள்ளானது உண்ட நிலையில் சிறிது போது போதை தந்து, உண்டவனத் தன்னை மறந்த நிலையில் வைத்திருப்பது போன்று, இத்தகைய கவிதைகளும் கேட்பவரைத் தம் வசப்படுத்திச் சில காலமாவது தம்மைப் பற்றி முணுமுணுக்கவைக்கவில்லையா. ஆம். அதனால் பெறும் இன்பம், சிறிதளவே அமைந்ததாயினும், அதுவும் இன்பந் தானே? அந்த இன்பத்தை வாரி, வழங்கும் பாடலக் கவிதை என்னதிருக்க முடியுங்கொல்?

இவ்வாறு பொருள்நலம் நோக்காது, இனிமை ஒன்றையே நோக்கி நிற்கும் கவிதைகளையோ, அன்றிக் கவிதைக்குரிய நாம் மேலே கண்ட அத்துணை இலக்கண வரம்பினையும் கொள்ளாது, இனிமை பயக்கும் வகையிலே அமைந்த பாடல்களையோதான் மதுரகவி என்று கொண்டார்கள் எனக்கொள்வர் ஒரு சாரார். எத்தனையோ நல்ல புலவர்தம் பாடல்கள் இலக்கண வரம்பற்றன. ஆகவே, இவை கவிதைகள் ஆகா, என்று கற்றறி புலவர்களால் ஒதுக்கப்பட்டதை அறிவோம். அண்மையில் வாழ்ந்து கவிதைப் பெருக்கிலேயே தோய்ந்து திளைத்துக் கவிச்சக்கரவர்த்தி எனவும் போற்றப்பட்ட