பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

கவிதையும் வாழ்க்கையும்


பல்லவப் பெருமான் நரசிங்கனை, மாமல்லபுரத்தைப் பற்றி நினைக்குந்தோறும், நாம் நினைக்கத்தானே வேண்டும்? மாமல்லபுரம் என்ற ஊர்ப்பெயரே அவனை நினைவூட்டுகின்றதே! ‘மாமல்லன்’ என்ப்து ஏழாம் நூற்றாண்டில் காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு ஆண்ட நரசிங்கன் விருதுப்பெயர்களுள் ஒன்று. அவன் காலத்தில், அவனது உதவியால் ஆக்கப்பெற்ற அச் சித்திரச் சிற்ப்புரிக்குத் தன் விருதுப் பெயர்களில் ஒன்றையே பெயராக அமைத்ததில் வியப்பில்லையன்றோ! ஆம்! அம் மாமல்லபுரக் கற்கோயில்கள் என்றென்றும் நரசிங்கன் பெருமையையும், அவன்வழிப் பல்லவர் பெருமையையும், அதன்வழித் தமிழர்தம் கலைத் திறனையும் உலகுக்குக் காட்டிக் கொண்டே இருக்குமல்லவா! இவ்வாறு தன்னைப்பற்றிக் கவலை கொள்ளாது, தன் வாழ்வையே தியாகம் செய்து, தன் நாட்டுக்கும், மன்னனுக்கும், கலைக்கும் அழியாப் புகழைத் தேடித் தந்த கலைஞனை வாழ்வில் வீழ்ந்தவன் என்று கூற முன் வருவார்களா!

இத்தகைய சிறப்புக்களையெல்லாம் எண்ணிய குமர குருபரர், இக் கவிகளுக்குப் பெரும் பெருமையைத் தேடித்தர விரும்புகின்றர். உலகையெல்லாம் நான்முகனாகிய பிரமன் உண்டாக்குகின்றான் என்பது புராண வரலாறு. அவ் வரலாற்றை உள்ளடக்கிப் பல உலகங்களை உண்டாக்கும் பிரமனும், கவிகளைப் படைக்கும் புலவருக்கு ஒப்பாக மாட்டான் என்று பாடுகின்றார். அப் பிரமன் படைக்கும் உடலும் உலகும், மாறியும் அழிந்தும் சிதைந்தும் விரைவில் கெட்டொழிகின்றன. ஆனால், இக் கவிஞர் செய்யும் கவிதையாகிய உடம்புகளோ, என்றென்றும் வாழ்கின்றன என்று கூறி, இதனால் கவிஞர்கள், படைப்புக் கடவுளினும் மேம்பட்டவர்.என்று காட்டுகின்றார். ஆனால், கலைஞரிடம் குடிகொண்ட கலைமகள் அப் பிரமனிடமே இடையறாது இயங்குகின்றாள் என்பதையும் குறித்து இருவரையும் ஒப்பு நோக்குகின்றார். இருவரும் கலைச் செல்வியாகிய கலைமகள் வழிப் பணியாற்றுகின்றாரேனும், அழியும். உடம்பையும் உலகையும் படைக்கும்