பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

கவிதையும் வாழ்க்கையும்


அவர் பாடிய பாட்டு வழியே அவர் பெற்ற நெல்லிக் கனியின் சிறப்பையும் காணலாம்:


‘பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக.பெரும நீயே! தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலே நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே!’ (புறம், 91)

என்று பாடி, நெடுங்காலம் தம்மை வாழ வைக்க நெல்லிக் கணியீந்த அதிகனை, ‘விடமுண்டும் என்றென்றும் கெடாது வாழ்கின்ற இறைவனைப் போல வாழ்க!’ என வாழ்த்துகின்றார். இவ்வாறே எத்தனையோ புலவர்கள் சிறக்க வாழ்ந்துள்ள வரலாறுகள் பல.

தமது வாழ்வில் மட்டுமன்றிக் கவிஞர்கள் பொது வாழ்விலும் தாங்கள் மேற்கொண்ட செயலை முடித்து வெற்றி பெற்று வாழ்ந்தவர்களாகத்தான் காண்கின்ற்றோம். நாட்டில் நடைபெற்ற போர்களுக்கிடையில் நின்று சந்து செய்து சமாதானம் நிலைநாட்டிய கவிஞர்களும், நடைபெற இருந்த போரினையே தடுத்து நிறுத்திய கவிஞர்களும், போர்க்களிப்பில் தன்னில் மகிழ்ந்து தருக்கும் மன்னனுக்கு அறிவு கொளுத்திய கவிஞர்களும் பொது வாழ்வில் வெற்றி பெற்றவர்களாவார்கள். அவர்கள் வெற்றி கவிதையின் வெற்றியாகவன்றோ அமைகின்றது! கோவூர்கிழார் என்ற புலவர், போர் நிறுத்திப் புகழ் பெற்றவர் என்பதைத் தமிழ்நாடு நன்கு அறியும்.

சோழ நாட்டுப் பங்காளிகளாகிய நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும், தம்முள் மாறுபட்டுப் போரிட்டுத் தம் நாட்டையே சுடுகாடாக்கிக் கொண்டிருந்தார்கள். அந்த நிலையில் மக்கள் உள்ளம் எவ்வளவு இடர்ப்பட்டிருக்கும் என்று யார் எண்ணிப் பார்த்தார்கள்? ஆம்; கோவூர் கிழார்தாம் எண்ணிப் பார்த்தார். பாவம் பங்காளிகள் இருவர் தம் சண்டையினாலே சோழநாடே பாழ்பட்டுப் போகின்றதே என்று