பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

கவிதையும் வாழ்க்கையும்


இக்குயத்தியார் இவ்வாறு அறிவுறுத்தாது இருந்திருப்பாரே யானால், வெற்றியில் களிப்புற்றிருந்த வீரர்கள் சுற்றியிருக்கும் ஊர்களில் என்னென்ன கொடுமைகள் செய்திருப்பார்களோ! அன்றி வேறு எந்த நாடுகளின்மீது படையெடுத்திருப்பார்களோ! இவர்தம் கவியால் அக்கொடுமைகள் அனைத்தும் அகன்றனவன்றோ!

அக்காலத்தில் மட்டுமன்றி, இவ்வாறு அறிவுறுத்தும் கவிஞர்கள் இந்தக் காலத்திலும் வாழ்ந்துள்ளார்கள். கடந்த போர் கழிந்து, ஜெர்மனியும் ஜப்பானும் வீழ்ச்சியுற்றபிறகு, ஆங்கிலேயரும் அமெரிக்கரும் அவ்வெற்றியைத் திக்கெட்டும் முழங்கக் கொண்டாடியதை நாம் அறிவோம். ஏன்? நாமுங்கூட ஆங்கிலேயன் காட்டிய ஆணை வழியே அவ்விழாவினைக் கொண்டாடினேம். ஆனல், அன்று வாழ்ந்த கவிஞன், அவ்வெற்றியினை வெற்றியாகக் கொண்டானா? அன்று சோழன் கரிகாலன் நாட்டிலேயே பிறந்து, அவனுக்கே வெற்றி விழாக் கொண்டாடல் தக்கதன்று என்று அறிவுறுத்திய வெண்ணிக் குயத்தியாரைப் போன்றே, அந்த ஆங்கில நாட்டிலேயே பிறந்து, அந்த ஆங்கில நாட்டு மக்களது வெற்றி விழாவை எள்ளி நகையாடியதோடு, அவ்விழாக் கொண்டாடியவர்களை அறிவற்றவர் என்றும் சொன்ன ஒரு கவிஞனை நாம் மறந்துவிட முடியுமா? ஆம். அவன்தான் அறிஞன் ‘பெர்னார்ட்ஷா’ நாடெங்கும் வெற்றிக் கொடி நாட்டி, விழா எடுத்துச் சிறப்புச் செய்த அந்நாளில் அவன், ஜெர்மனிமேல் வெற்றி கொண்டதை விழாவாக அறிவிலிகள் கொண்டாடுகிறார்கள்,[1] என்று கூசாமல் சொன்னானே! அக்கவிஞன் உள்ளத்து எத்துணைத் தீரம் இருந்திருக்க வேண்டும்! அவன் கூற்றுக்குக் காரணமும் காட்டினனே! பரந்து கிடக்கும் உலக சமுதாயத்தின் ஒரு பகுதியாகிய ஜெர்மனியை அழித்ததற்காக மற்றொரு பகுதியா விழாக் கொண்டாடுவது? உடலில் ஒர் உறுப்பு அழிந்தது என்றால் மற்றோர் உறுப்புக்குக்


  1. 1. ‘The fools are celebrating the victory over Germany’