பக்கம்:கவிதை உருவாக்கம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இத்தகைய ஒரு கொள்கையை அடிப்படையாக வைத்தே சங்க இலக்கியங்களின், கவிதைகளின் உருவ ஆக்கம் இங்கு ஆராயப்படுகின்றது. சங்கப் பாடல்களில் காணப்படும் ஒவ்வொரு பாடலின் வாக்கியமும் அவற்றின் அமைப்பும். வகையும், சேர்க்கையும், அவற்றின்கண் காணப்படும். சொற்றொடர்கள். சொற்கள் போன்றவற்றின் முழுப் பரிமாணமும் நன்கு ஆராயப்படும் போதுதான் அவற்றின் வளமும் வளப்பும் வசீகரமும் சிறப்பும் செம்மையும் விளங்கும். ஒவ்வொரு பாடலும் பிற பாடல்களிலிருந்து எவ்வாறு மாறுபடுகின்றது? அதற்குரிய காரணங்கள் என்னென்ன? எந்தெந்த வாக்கியங்களின் இணைப்புகள், ஆக்கங்கள், அவற்றில் காணப்படும் பலவேறு இலக்கணக் கூறுகள் போன்றின்னோரள்ள பலவேறு மொழியமைப்புக் கூறுகள் எந்தெந்த அளவுக்குக் கவிதையின் உயர்வுக்கு உதவுகின்றள? என்பன போன்ற பல்வேறு ஆய்வுகள் கவிதையின் உருவ அமைப்புகளை அறிந்துகொள்ள உதவுகின்றன. ஒவ்வொரு சிறிய சிறிய கூறும் கவிதையின் உருவ ஆக்கத்தில் பெரும் பெரும் பங்கினை வகிப்பதைக் காணமுடியும். சின்னஞ்சிறு இடைச் சொற்களே கவிதையின் உருவ அமைப்பில் உயரிய இடத்தைப் பெறுவதையும் அது கவிதையின் சிறப்பினைக் கூட்டுவதையும் கண்டு மகிழ முடிகின்றது. கவிதை என்பது நூற்றுக்கணக்கான் கவிதைப் பண்புகளைத் தன்னகத்தே கொண்டு அவை ஒருங்குசேர இணைந்து இரண்டறக் கலந்து, ஒன்றுக்கு மற்றொன்று உதவி. ஒரு ஒருமைப்பாட்டுடன் நிற்கும்போதுதான் கவிதை கவிதையாக மலருகின்றது என்பதைத் தத்ரூபமாகக் காணமுடிகின்றது. சங்ககாலக் கவிஞர்கள் இவற்றைத் தனித் தனியே தெரிந்தோ ஆய்ந்தோ கலையாக்கம் செய்தவர்கள் அல்லர். எந்தக் கவிஞனும் இவ்வாறு செய்வதில்லை. கருவிலே திருவும், கருத்திலே உயர்வும், செயலிலே செம்மையும். சிந்தனையில் செழுமையும், கூர்த்த மதியும், கூரிய கண்களும், எதையும் ஊடுருவிச் செல்லும் உள்ளமும் கொண்டு விளங்கும் இக்கவிஞர் பெருமக்களுக்கு இயற்கையான ஒரு வரப்பிரசாதமாக இவையெல்லாம் அமைந்து விடுகின்ற காரணத்தால் தாள் எத்தனையோ சிறந்த கவிதைகளை எந்தவிதமான சிரமுமின்றிச் சிறப்பாகச் செய்து விடுகின்றனர். எழுத்தும் அசையும், ஏற்றம் மிகு சீரும், எழில் மிகுந்த சொல்லும் சொற்றொடர்களும், வளம் மிக்க வாக்கியப் பாங்கும் அவர்களின் ஏவல் கேட்டு நிற்கும் நிலையில்தான் எத்தனையோ கவிதைகளை அவர்கள் மிக எளிதாகச் ஆக்கி விடுகின்றனர். சிறந்த கவிஞர்கள் கற்பகத் தரு போன்றவர்கள். அது தரும் பூவும் பிஞ்சும், காயும் கனியும் என்றும் எப்போதும் கிடைப்பது போன்று எழில் மிகுந்த கவிதைகளை எப்போதுமே ஆக்குவார்கள். சங்க காலக் கவிஞர்கள் விடிவெள்ளி போன்று கவிதை வானிலே வலம் வரும் கவிஞர் பெருமக்கள். அவர்கள் கண்ட கவிதைகள் காலவெள்ளத்தையும். கருத்து மாற்றங்களையும் கடந்து எத்தனையோ நூற்றாண்டுகளாக நம்மிடையே ஓடும் வற்றாத ஜீவ நதிகள். அள்ள அள்ளக் குறையாமல் நம்மை மகிழ்விக்கும் அட்சயப்