பக்கம்:கவிதை உருவாக்கம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாத்திரங்கள். எத்தகைய கூரிய நோக்குக்கும் கூர்மையான புதிய புதிய பார்வைக்கும் ஈடும் எடுப்பும் கொடுத்து நிற்பவை. இந்த நிலையில்தான் அவற்றின் உருவ ஆக்கம் இந்த நூலில் ஆராயப்படுகின்றது. அதிலும் குறிப்பாக விளித்தொடர் கொண்ட பாடல்களின் ஒளி மட்டுமே இங்கு காட்டப்படுகின்றது. இந்த ஒளி சங்ககாலக் கவிஞர்களின் பேரொளியைக் காட்டும் பெரும் ஒளிக் கற்றைகளாகவும் உள்ளன. இப்பாடல்களில் காணப்படும் உத்திகள் பல. உயர்வான ஆக்கங்கள் பலப்பல. சிந்தளையைக் கிளறும் செய்திகள் இன்னும் பலப்பல. அச்செய்திகளையும் செம்மையாகக் காட்டும் சிறந்த மொழியமைப்புகளும் பல. இவற்றையெல்லாம் ஆராய்ந்து நிற்கும் போதுதான் இச்செவ்வியல் இலக்கியங்களின் செம்மாந்த நிலையைச் சிறப்பாகக் காணமுடிகின்றது. இவற்றையெல்லாம் தமிழ்கூறு நல்லுலகத்தின் முன்னே தவழ விடுவது தான் இந்நூலின் நோக்கம். உருவ ஆக்கம் என்பது உயர்ந்த ரகக் கவிதைகளுக்கு உரமிடும் ஒரு பணியாகும். இந்நிலையில் இந்நூல் சங்க இலக்கியத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் காட்ட முயலுகின்றது. இந்த முயற்சியின் வெற்றியும் தோல்வியும் வாசகர்களின் கையில்தான் அடங்கிக் கிடக்கின்றன. அவர்கள்தான் உரைகற்கள்! உரமூட்டுவதற்கு உரியவர்கள்! அடுத்த நூலுக்கு வேரும் விதையுமாக உள்ளவர்கள்! இந்நூலின் முதல் இயலாக உள்ள "இலக்கிய உருவ ஆக்கம்" என்பது 'புலமை'யில் 1996இல் வெளிவந்த கட்டுரையாகும். இதனை இந்நூலில் இணைத்துக் கொள்ள ஒப்புதல் அளித்த அதன் ஆசிரியர் டாக்டர் பொள் கோதண்டராமனுக்கு என் நன்றி. இந்நூல் எழுதும்போது என்றும் நானும் நண்பர் கெவை. சண்முகமும் கலந்து பேசுவதுண்டு. எங்கள் மாலை நடை நேரமே மொழியியல், இலக்கிய, இலக்கண நடைதான். முன்னர்க் கூறியபடி பல செய்திகள் விளக்கம் பெறும். இன்னும் பல புதிய வெளிச்சத்தைக் காட்டும். இன்னும் சிலவோ விவாதத்தைக் கொண்டு வரும். ஆனால் எப்போதுமே விளக்கத்தில் தான் முடியும். அவருக்கு என் நன்றி. இந்நூலின் அச்சுப் பிரதியைச் சரி செய்து அழகுப் பெறச் செய்தவர் பேராசிரியர் இரா. சாரங்கபாணி அவர்கள். குறைந்த நேரத்தில் நிறைவாக அதனைச் செய்த அன்னாருக்கு என்றும் என் நன்றி உரித்தாகுக. இந்நூலை உவகையோடும் உள்ளத் துடிப்போடும் வெளியிட வந்தவர் அருமை நண்பர், உடன் பயின்ற உரிமையர் என்றும் எவரையும் ஊக்குவிப்பவர் டாக்டர் ச. மெய்யப்பன் அவர்கள். நல்லதரமான புதிய புதிய நூல்களை வெளியிடுவதிலும் அவற்றிற்கு வேண்டிய உதவிகளைச் செய்வதிலும் சளைக்காத ஒரு தமிழ் ஆர்வலர். அவருக்கு என் நன்றி என்றும் உரியது. மாரியப்பா நகர் ச. அகத்தியலிங்கம்