பக்கம்:கவிதை உருவாக்கம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை சிறந்த கவிதை எள்பது சிறந்த கவிஞனின் செம்மையான இதயத்தில் கருக்கொண்டு, அவள் இதழில் உருக்கொண்டு. வாசகனின் உள்ளத்தில் கால்கொண்டு காலம் கடந்து வாழும் செம்மையான ஒரு சொற்கலையாக்கமே. விரிந்து பரந்து எங்கும் வியாபித்துக் கிடக்கும் இந்த முழுப் பிரபஞ்சமே கவிதையின் கருவுக்குக் கருவாக அமைவது. அதில் வாழும் மனிதனின் செயற்கரிய செயல்கள், செம்மையான அவள் எண்ணங்கள், அவன் வாழ்வில் சந்திக்கும் பல வேறு பிரச்சினைகள், அவன் உள்ளத்தில் ஊறும் காதல் உணர்வுகள், வீர உணர்ச்சிகள், ஈரப் பண்புகள், இனிமையான அனுபவங்கள் போன்ற இன்னோரன்ன வெல்லாம் கவிதையின் பாடு பொருள்கள். கிரேக்கச் சிந்தனையாளர்களின் மொழியில் சொன்னால், மனித வாழ்வின் பல்வேறு கோணங்கள், பன்முக வாழ்க்கைக் கூறுகள், அவன் ஆசைகள், அனுபவங்கள், அபிலாஷைகள், ஆதங்கங்கள், அன்பு உணர்வுகள், அளக்க முடியாத துன்பங்கள், துயரங்கள், துயரவேதனைகள், வெடிப்புகள், குமுறல்கள். கொதிப்புகள், அவனையே கொள்ளை கொள்ளும் இதயத் தாபங்கள், அவன் இறப்பு, இல்லாமை, பொல்லாமை போன்ற இன்னும் எத்தனை எத்தனையோ மனித உணர்வுகளும் நிகழ்ச்சிகளும் கவிதைக்குக் கருவாக அமைகின்றன. கவிஞனின் கூரிய கண்களும் கூர்த்த மதியும் உயரிய உள்ளமும் உணர்ச்சி வெள்ளம் அலை மோதும் அவள் உள்ளுணர்வும் சமுதாய அழுத்தமும் அதன் தாக்கமும் உள்ள அதே நேரத்தில் சாந்தியும் சந்துஷ்டியும் அவற்றுடன் சங்கமம் ஆகும்போது தான் கவிதைகள் பிறக்கின்றன. இதைத் தான் ரோம நாட்டுப் பாவியல் பேராசான் ஹொராஸ் 'கவிதைத் தெய்வம் திருவாய் மலரும் போது உள் காதுகளைத் தீட்டிக் கொள். அமைதியிலும் சாந்தியிலும் உன் உணர்வுகளை உலரவிடு மீண்டும் மீண்டும் சிந்தித்துச் செயல்படு. அந்தச் செயல்பாட்டில் தோன்றுவதுதான் செம்மையான செஞ்சொற் கலையாக்கம்; கவிதையாக்கம்' என அருமையாகக் கூறுவார். இதே கருத்தைத்தான் பின்னர் வோட்ஸ்வொர்த் சிறிது மாற்றி “Poetry is the spontaneous overflow ofpowerful feelings; it takes its origin from emotion, recollected in tranquility" எனக் கூறிப் போந்தார். (1800, lines 694-96) கவிதையாக்கம் அல்லது கவிதை உருவாக்கம் என்பது கவிதையின் மொத்த உருவாக்கமாகும். அதன் பாடுபொருளும் கவிதையின் உருவ (வடிவ) ஆக்கமும் இணைந்து நிற்கும் அவியக ஆக்கம் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது. அதாவது உள்ளடக்கமும் உருவ ஆக்கமும் இணைந்து நிற்கும் ஒட்டு மொத்தமான ஒரு உயிராக்கம் என்பதாகும். கவிதையின் கரு அல்லது உள்ளடக்கத்துக்கு உரியது இந்த முழுப் பிரபஞ்சம் என்றால் அதன் உருவ ஆக்கத்துக்கு உயிர்நாடி மனிதன் பேசும் மொழியின் ஆழ்ந்து அகன்று கிடக்கும் முழுப் பரிமாணத்தின் ஓட்டு