பக்கம்:கவிதை உருவாக்கம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அனுபவங்களும் இவர் தம் நூலாக்கத்திற்குத் துணை நிற்கின்றன. இந்தியாவின் குறிப்பிடத்தக்க மொழிநூல் அறிஞர்களில் முதல் வரிசையர். சொற்றொடர் ஆக்க ஆய்வில் விரல் விட்டு எண்ணக் கூடிய மிகச் சிலருள் இவர் ஒருவர். ஆய்வில் தோய்வு கொண்டவராதலால் இவர் எழுத்தில் ஆராய்ச்சி வன்மை பளிச்சிடுகிறது. சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களே என்ற அரிய பெரிய நூலை எழுதி ஏற்றம் பெற்றார்கள். இப்போது *கவிதை உருவாக்கம்' என்னும் நூலைச் சிறப்பாக உருவாக்கியுள்ளார்கள் தொடர்ந்து தொல்காப்பியரின் கவிதைக் கோட்பாடுகள் என்ற தலைப்பில் இருபெரு நூல்களை உருவாக்கி வருகிறார்கள். உயர்தனிச் செம்மொழி தமிழ் என்பதை நிறுவுவதாலும் உலக இலக்கியங்களுக்கு ஒப்பானவை தமிழ் இலக்கியங்கள் என்பதை ஓயாது தமது உழைப்பால் உறுதி செய்து வருகிறார். மொழியியல்துறை மேதையாகிய இவர் இலக்கிய ஆய்வை முழுநேரப் பணியாகக் கொண்டு மூத்த தமிழுக்கு ஆக்கப்பணிகள் செய்ய வந்திருப்பது இக்கால மொழியியல் அறிஞர்கள் பின்பற்றிச் செயல்பட வேண்டிய செந்நெறியாகும். பேராசிரியர் அகத்தியலிங்கனாரின் அரை நூற்றாண்டு உழைப்பு அவருக்குப் பெயரையும் புகழையும் பெரும் பதவிகளையும் நல்கி வருகிறது. மணிவாசகர் பதிப்பகத்தின் வளர்ச்சிக்கும் வளவாழ்விற்கும் ஆக்கத்திற்கும் மூதறிஞர் வசுப. மாணிக்கனார், ச. அகத்தியலிங்கம், இரா. சாரங்கபாணி, செவை. சண்முகம், அரவிந்தன், சக்திவேல் முதலிய அறிஞர் பெருமக்கள் உருவாக்கித் தரும் செம்பதிப்புகளே அடிப்படை இப்பெருமக்கள் அனைவர்க்கும் பதிப்பகத்தின் நெஞ்சார்ந்த நன்றி.