பக்கம்:கவிதை உருவாக்கம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒரு கவிதை உருவாகும்போது அதன் தோற்றமும் அது பெறும் மாற்றமும் அதன் வளர் நிலைகளும் இங்கே ஆராயப் பெறுகின்றன. ஒவ்வொரு கவிதைக்கும் உள்ள தனிக் கூறுகளே அக்கவிதைக்குச் சேர்க்கும் வலிமை. கவிஞனின் மொழிப்புலமை, உலகியல் அறிவு, உன்னதமான எண்ண ஓட்டம், உயிர்க்குலத்தின் மேல் உள்ள நம்பிக்கை, இலட்சிய இலக்குகள் கவிதை உருவாக்கத்தில் பெறும் இடம் இங்கே ஆராயப் பெறுகின்றன. புதிய திறனாய்வு நெறியில் கவிதைக் கூறுகள் அனைத்தும் தனித்தனியாகவும் ஒருங்கிணைத்தும் ஆராயப் பெறுகின்றன. இந்நூலை இயற்றிய அறிஞர் அகத்தியலிங்கம் புகழ்மிக்க அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்க் கொடை 1955-57இல் அங்கு என்னுடன் முதுகலை பயின்றார்கள். கற்றலில் ஆர்வம் காட்டிக் கற்றார்கள். முதல் வகுப்பில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்கள். அன்று தொடங்கி இன்றுவரை படிப்பும் எழுத்தும் இவர்கள் வாழ்க்கை நெறியாகி விட்டன. கடந்த 40 ஆண்டுகளாக இவர்கள் ஓய்வின்றி உழைப்பதை நான் உடனுறைந்து அறிபவன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பெருமைமிகு மொழியியல் உயராய்வு மையத்தை பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் தொடங்கினார். அது உருப்பெறுவதற்கும் பன்முக நலன்கள் பெற்றுப் பாரில் உயரவும் பல்லாற்றானும் உழைத்த பெருமை மொழியியல் அறிஞர் அகத்தியலிங்கத்தையே சாரும். 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முனைவர் பட்டங்கள் பெற வழிவகுத்தவர். திராவிட மொழிகள் அனைத்தையும் கற்பதற்குக் களம் அமைத்தவர். 100க்கு மேற்பட்ட மொழியியல் நூல்கள் மலரப் பாத்தி அமைத்தவர். ஆராய்ச்சி வேள்வி சிறக்கத் தடங்களை அமைத்தவர். பல பேராசிரியர்களின் உற்பத்திச் சாலையாக விளங்குபவர். தமிழர்களின் தனிப்பெருமையாகிய தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இணையற்ற இரண்டாவது துணைவேந்தராய் வீற்றிருந்து இவர்கள் ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன. செயல், செயல், செயல் எனத் துடிக்கும் 69 ஆண்டு இளைஞர் இவர். பணி ஆய்வுக்குப் பின்னும் ஓய்வறியாது உழைக்கும் இப்பேராசிரியர் திட்டமிட்டுப் பெருநூல்கள் பலவற்றை உருவாக்கி வருகிறார்கள். இவர்களது 40 ஆண்டு கல்வித் தேர்ச்சியும் பட்டறிவும் இலக்கிய அனுபவங்களும் உலகியல்