பக்கம்:கவிதை உள்ளம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்



என் அழகைக் கண்டு இளகமன மில்லைகொல்லோ
உன் அருகே என்றும் உற்றகதை உரைப்பேன்

கண்ணாளா என்பேர் கண்ணாட்டி தானாகும்'

என்று தன்னைப்பற்றித் தான் கூறிக்கொள்வதும் நகைப்பினை நல்குகிறது.

வலிய, தன்மேல் சாயவந்த அவளிடமிருந்து ஒதுங்கி அலறிநின்ற ஆடவனிடம்,

'கோபம் ஏன் கொண்டீர் கொண்டால் எனைப் பலனும்
வேகமாய் மிக்கிடும் நீர் வேண்டியதைச் செய்திடுவேன்
வீட்டிற்குப் பொட்டிட்டு வேலை பலசெய்து
வாட்டம் அகற்றி வளர்ப்பேன் பணிப்பெண்ணாய்,
கண்ணாளா என்னைக் கலியாணம் செய்தக்கால்
எண்தை தேசம் எல்லாமும் சுற்றிடலாம்
என்னைப் பலரறிவார் யானறிவேன் அவர்பேச்சு

உன்னை உடனழைத்து உற்றநலம் பற்றிடுவேன்'

என்று பலவாறு பசப்பியதையும் பகர்கின்றார். இவ்வாறு, கெஞ்சியவளை,

'நீ வாழவேண்டின் நீங்கு உடன்எனையே
போவாய் வெளியே பொல்லாங்கு தேடாத

நின்றால் உயிரிழப்பாய் நில்லாது ஓடிவிடு'

என அவளை விரும்பா அவ்வாடவன் எச்சரிக்கின்றான்.

"கணத்தே உன் மதத்தைக்
கட்டுகின்றேன் என் அண்ணன்.
மனத்தே உனைநினைத்தால் மாள்வாய்நீ

இக்கணத்தே, கூப்பிடுவேன்"

என்று அவன் கூக்குரலிட்டதையும் அவள் அண்ணன் வந்ததனையும் கூறுகின்றார். அதே நேரத்தில் மாயப் பொய்க்காரி இவ்வாடவனின் சோதரரை முன்பே காயப்படுத்திக் கட்டி வைத்திட்ட தன்மையையும் அவ்வாடவனுக்கு உணர்த்த அவன் சொந்தச் செயல் மறந்த சோதரர்களைப் பார்த்து.

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/24&oldid=1389154" இலிருந்து மீள்விக்கப்பட்டது