பக்கம்:கவிதை உள்ளம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்


வித்தகமாய்ச் சீடருக்கு விளைவு காட்டி
விண்ணிடத்தும் மண்ணிடத்தும் விழிப்புக் காட்டி
எத்திசையும் இறையருளே காட்டிக் காட்டி
இன்பநிலை எய்திட்ட இயேசு வாழி!

கொல்லுதலே சிந்தையென வந்த பல்லோர்
குமைந்திடவே அருள்நோக்கங் கொண்டு நின்று
ஒல்லையிலே வருந்துன்பம் உணர்ந்து சீடர்
உடனிருக்க ஒருவனது உளவைக் காட்டி
வல்லையிலே முப்பதுபொன் பெறுவா னென்று
மறக்கருணை அவண்காட்டி மற்றெல் லோர்க்கும்
சொல்லறிய சகிப்புநிலை தளங்கக் நாட்டி
துயர் தீர்க்கவந்துதித்த தூயோய் வாழி!

பேரரசன் பிலாத்துடனே சேர்ந்த பல் லோர்
பிழைபடவே உனைப்பிடித்துப் பெரிது மாழ்ந்து
பாரிடத்துக் கொலைசெய்ய நின்றார் அன்னாள்
பராபரனே பாரமெனப் பார்த்து நின்றாய்!
ஆரிடத்துஞ் சினங்கொள்ளாய் சிலுவை யேறி
அந்நிலையில் அன்பெனுநற் குன்ற மேறி
காரிடத்தும் ஒளியிடத்தும் கலங்கா தீண்டு
கர்த்தர்வழி காட்டிநின்ற கருத்தே வாழி!

உலகத்தார் உய்வதற்காச் சிலுவை யேறி
உயிர்அடக்கி உற்றதொரு மூன்றாம் நாளில்
பலகற்றார் என்னாளும் போற்று மாறு
பாரிடத்து உயிர்த்தெழுந்த பரமன் மைந்தா!
நிலைபெற்ற உன்அன்பு மார்க்கமென்றும்
நீணிலத்துத் தழைத்தோங்கி நிலவி வாழ்க!
மலமற்று உயிர்கமெல்லாம் அன்பு பற்றி

மாதேவன் நல்லருளில் மகிழ மாதோ!

78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/80&oldid=1389217" இலிருந்து மீள்விக்கப்பட்டது