பக்கம்:கவிதை உள்ளம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம்



நோய்நீக்கி நோய் பெற்றார் விசுவா சிக்க
நோன்மைபெறு வலிகாட்டி நுழையும் வண்ணம்
வாய்மைமொழி இயம்பிஐயா யிரவர்க் கன்று
வண்மையுடன் ஈரப்பம் வழங்கி நின்றாய்!
தூய்மைநிறை உள்ளமதே இறைவற் கென்றும்
துன்பமது அவர்பொருட்டுத் தூய்மை யென்றும்
பேய்மையெலாம் அடியவரைப் பிழைக்கு மென்றும்
பெருநெறியே புகுத்திட்ட பெரியோய் வாழி!

உவமைகளால் பலஅறிவு விளங்கங் காட்டி
உற்றபெரும் பாதகங்கள் உலவ வாட்டி
பவமகலும் மனத்திடத்தைப் பரக்கக் காட்டி
பரஞ்சுடரின் உண்மைநிலை பாரிற் காட்டி
தவமுயலும் அறிவுடையோர் தன்மை காட்டி
தாரணியை அன்புமய மாகக் காட்டி
அவதியெலாம் அற்றிடுநல் வழியைக் காட்டி
ஆனந்த நிலைகாட்டி ஆண்டாய் வாழி!

ஆசிரியர் குருவென்பார் உயர்ந்தோ ரென்று
அறிவழிந்து நின்றிட்டார் அல்லல் செய்தார்!
மாசிறிய ராகி அவர் இழைத்ததெல்லாம்
மாதேவன் பொருட்டேற்று மகிமை காட்டி
காசியினில் பாவிகளின் பொருட்டு வந்து
காணரிய பவம் நீக்கிக் கருணை காட்டி
ஆசில்பல அறமாற்றி அன்பு காட்டி
அடியவர்கள் பலர்கொண்ட அண்ணால் வாழி!

சத்துருவை நேசிக்கும் தன்மை காட்டி
தனிநிலையாம் இறையருளின் தயவைக் காட்டி
சுத்தமிலா அற்பர்களைத் தூர ஓட்டி

தூய்மையதே இறையென்று துளங்கக் காட்டி

72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/79&oldid=1389212" இலிருந்து மீள்விக்கப்பட்டது