பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற்றி பாரதியார் அதிகமாக சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. - - சுதந்திரமும் ஜனநாயகமும் இரட்டைக் குழந்தைகள்; என்றாலும் கூட, இந்தியாவுக்கு முதன்முதலில் வேண்டியது சுதந்திரம்தான் என்பதை பாரதி உணர்ந்திருந்தார். அதன் பிறகு குடியாட்சி, பாராளுமன்ற முறை இப்படிப்பட்ட அமைப்புக்கள் வரவேண்டும். பாரதி முதல்கட்டத் தேவை பற்றி - சுதந்திரம் பற்றிப் பாடினார் என்றால், இரண்டாவது கட்டத் தேவையான குடியாட்சி அமைப்பு முறையைப் பாரதிதாசன் எடுத்துக்கொண்டு தொடர்ந்தார். பாரதியார் விட்டுப் போனதை பாரதிதாசன் தொடர வாய்ப்பாக இருந்தது. அதனால்ே பாரதிதாசன் கவிதைகளில் முக்கியமாக, மன்னராட்சி மறைந்தது மக்களாட்சி மலர்ந்தது என்ற கருத்துக்கள் அதிகம் காணப்பட்டன. ஒரு கவிஞன் தொடர்ந்து புதிய புதிய சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு செல்வதற்கு முன்னோடிகள் என்ன செய்திருக்கிறார்கள் என்று அறிந்து கொள்வதற்கு நமக்கு அதிகமான வாய்ப்புக்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆகவே பழசு என்பது நமக்கு ஒரு தடை கிடையாது. ஏற்கெனவே சொன்ன கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டுப் புதுமையான கருத்துக்களைச் சொல்வதற்குரிய Reference மாதிரி பழையதை நாம் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டுமே தவிர தடையென்று கருதக்கூடாது. அகலிகையின் கதை இன்று வரையிலும் பல்வேறு விதமான சிந்தனைகளில் சிறுகதைகள், நாடகங்கள், கவிதை போன்றவற்றி I6