பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞனாகிவிடமுடியுமா? அப்படிப் பார்த்தால்தமிழ் நாட்டிலே இருக்கிற புலவர்கள் எல்லாரும் கவிஞர்களா? மீரா: இலக்கணம் கற்றுக் கொண்டால் கவிஞனாகிவிட முடியும் என்ற கருத்து அடிபட்டுப் போய்விட்டது. உதாரணத்திற்கு பாரதி காலத்திற்குச் சற்று முன்னாடி மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இருந்தார். அவர் எழுதிய நூல்கள் எண்ணிக்கையில் மிக அதிகம். இவரோடு பாரதியை ஒப்பிட்டால் பாரதி ரொம்பவும் குறைவுதான். ஆனால் கவிஞன் என்கிற அங்கீகாரம் பாரதிக்குத்தான் கிடைத்திருக்கிறது. இந்தப் பட்டியலில் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு இடமில்லை. அவர் வித்துவானாகத்தான் இருக்கிறார். பாரதிக்குக் கவிஞன் என்கிற அங்கீகாரம் இருக்கிறதென்றால் அடிப்படையில் அவருக்கு கவிதையுணர்வு இருந்திருக்கிறது. பாரதிக்கு நமது பழைய இலக்கியங்களும்-ஏன் இலக்கணமும் கூடத்தடையாய் இருந்ததில்லை. இலக்கணம் ஒருவகையில் தடைதான் என்றாலும் அந்த இலக்கணம் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது என்பதை வைத்துத் தான் தடையாக இருப்பதும் துணையாக இருப்பதும். பாரதிக்கு இலக்கணம் தடையாக இல்லை. அவன் அதைப் பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தியதால் அது அவனுக்குத் துணையாகவுமிருந்திருக்கிறது. இலக்க ணத்தை இப்படிப் பயன்படுத்திய சாதுர்யம் பாரதிக்கு இருந்திருக்கிறது. இலக்கணத்தைச் சேர வேண்டிய 2]