பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொன்னமாதிரி தான் ஆகிவிடும். இலக்கணம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப் பட்டால், சுமத்தப்பட்டால் அதிலிருந்து விடுபட வேண்டும் என்கிற எண்ணம் நமக்கு ஏற்பட்டுவிடும். மனிதனுக்கு சுதந்திர உணர்ச்சி என்பது இயல்பாகவே இருக்கிறது. மகனை அப்பாவோ, ஊழியரை மேலதிகாரியோ, அழுத்திவைக்கும்போது இதிலிருந்து மீறிச் செல்ல வேண்டும் என்கிற மனநிலை ஏற்பட்டுவிடும். அதனால் இலக்கணத்திலிருந்து நல்ல தன்மைகளை எடுத்துக் கொண்டு பயன்படுத்தினால் அதைக் குற்றமாகச்சொல்ல முடியாது. உதாரணத்திற்கு நீங்கள் சொன்ன இசைத்தன்மை. இதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள். கவிதையில் Rhythm சந்தம் இருக்க வேண்டும். பாலா: எந்தக் கவிதையாய் இருந்தாலும் அதில் 'ரிதம் இருக்க வேண்டும். புதுக்கவிதையிலும் இந்த 'ரிதம் வருகிறதா? மீரா ஞானக்கூத்தனோட கவிதைகளிலே இந்த Rhythm பார்க்கலாம். ஞானக்கூத்தனுக்கு இலக்கணம் தெரியும் என்றுதான்நான் நினைக்கிறேன். அவருடைய கவிதைகளை எல்லாம் படித்துப் பார்த்தால் இலக்கணங் களை நன்றாகக் கற்றுத்தேர்ந்து அதைக் கவனமாகக் கையாண்டுதான் கவிதைகளை எழுதியிருக்கிறார் என்பது தெரியும். சில இடங்களில் அறுசீர்விருத்த ஓசை இருக்கும். அகவலோசை வரும். இதெல்லாம் ஏற்பாடுகள் என்று சொல்ல முடியாது. இலக்கணப் 26