பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்சி இருப்பதென்பது ஒருவகையில் நல்லதுதான். ஜெயகாந்தன் இலக்கணத்தை முதலில் கற்றுக் கொள்ளுங்கள், அப்புறமாக அதை மீறுங்கள்... என்று சொல்வார். ஒரு வகையில் இன்றைய இளைஞர்களுக்கு இதுகூட பயனாக இருக்கும். மரபை அறிந்துதான் மரபை மீற வேண்டுமே தவிர, எதுவுமே அறிந்து கொள்ளாமல் மீறுகிறோம் என்பது முட்டாள் தனமானது. இலக்கணம் மட்டுமல்ல மரபு. மரபில் இலக்கணமும் ஒர் அம்சம். பாலா: இலக்கணத்தைக் கற்றுக் கொள்வதென்பது ஒருவகையில் அவசியம்தான். ஏனென்றால் அது இரண்டு விஷயங்களை நமக்குச் சொல்கிறது. ஒரு விஷயத்தைச் சுருங்கச் சொல்வதற்கு இலக்கணம் உதவிக்கு வரலாம். ஒரளவு வார்த்தைகளிலிருந்து இசையை எழுப்புவதற்குப் பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால் இலக்கணத்தைக் கறாராகக் கடைப்பிடித்தோமென்றால் கவிதை வராது என்பதைப் பலரையும் பார்க்கிறபோது நமக்குத் தெரிகிறது. சிலபேர் மரபுதான் இலக்கணம், இலக்கணம்தான்மரபு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மரபை அறிந்து மரபை மீறுதல் என்கிற நியதியைப் புரிந்து கொள்ளாம லிருக்கிறார்கள். இந்த மரபையேகூட இலக்கணம் என்று தான் இன்றைக்கு நிறையப்பேர் நினைக்கிறார்கள். மரபு என்பது நம் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் இருக்கிறது. இலக்கியத்தில் மரபு, ஆன்மீக மரபு, கலாசார மரபு, வாழ்க்கை மரபு. பண்பாட்டு மரபு, சிந்தனைகளில் மரபு என் 27