பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலா: உங்கள் 'கனவுகள் தொகுதி முறிந்த சிறகுகள் மாதிரி கதையாக இல்லாவிட்டாலும் கதைக்குரிய Progression Q(51’ Ljøg, prair பார்க்கின்றேன். அதில் என்னைக் கவர்ந்தது திரைப்படம் போல பிரேம் பிரேமாக் (FramebyFrame) 'கட்' பண்ணி நீங்கள் காட்சிப்படுத்தியிருக்கிற பாணி. திரைப்படச்செல்வாக்குள்ள நம் தமிழ்ச்சூழலில் இந்த Technique எளிதில் வரவேற்கப்பட்டுவிட்டது. அதே நேரம் நம் சங்கப் பாரம்பர்யத்தின் தொடர்ச்சியும் இந்த Frame களில் வெளிப்படுகிறது. ஆனால் உங்களை 'நகல் எடுத்தவர்களால் இதைச் சாதிக்க இயலவில்லை. அவர்களின் தொகுதிகளில் வார்த்தைகள் மிஞ்சினவே தவிர உங்கள் கவிதைகளின் உணர்வுக் குரலை நகலெடுக்க அவர்களால் இயலவில்லை.நல்ல கவிதை அதற்குரிய Form -ஐ அதுவாகவே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. இரா.வே. அது ஒரு வகையில் சரி. Form -ஐ கவிதையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது என்பது. ஆனால் ஒரு கவிதை தனக்குரிய விஷயத்தையும் ஒரு குறிப்பிட்ட வரையறையோடு முடித்துக்கொள்கிறதே. இது எதனால் சாத்தியம்? பாலா. சொல்லி முடித்துவிட்ட பிற்பாடு மேலும் சொல்ல வேண்டி அவசியமில்லாமல் போய் விடுகிறது அல்லவா ரொம்பவும் அதீதமான உணர்ச்சியைச் சொல்கிறபோது... உதாரணமள் மீராவின் கவிதையில்