பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் காலைச் சுற்றிக் கங்கை பாய்வதாக உணர்கிறேன் என்று வரும். இது அந்தக் கங்கையினுடைய கிளர்ச்சி இருக்கிறதே... அதை imagine பண்ணிப் பார்க்கிறதே பெரிய விஷயம். கங்கைதன்காலைச்சுற்றிக்கொண்டு பாய்கிறது என்கிறதற்குப் பிறகு மேற்கொண்டு எதுவும் சொல்ல அவசியமில்லை என்பதோடு அந்தக் கவிதை முடிந்து விடுகிறது. ஒரு நல்ல கருத்து நல்ல கவிஞனது கையில் அதற்குரிய வடிவத்தை அதுவாகவே தேர்ந்து கொள்கிறது. - மீரா: ஆரம்பிக்கும்போதும் முடிக்கும்போதும் கூட ஒருFormஒரு கவிதையை உயர்த்திக் காட்டிவிடும். சில நேரங்களில் கவிதையை முடிக்கிறதென்பது... முடிந்துவிட்டதா என்று நினைக்குமளவுக்கு அதிர்ச்சி தரக்கூடிய சொற்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முடிக்கிற இடத்தில் மனதில் அலைகளை உண்டாக்கி மேலும் மேலும் அதைப்பற்றிச் சிந்திப்பதற்குரியதாக அமைய வேண்டும். ஆரம்பம், முடிவு, எந்தெந்த இடத்தில் ஏற்ற இறக்கம் கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் கவிஞன் அவனுக்கேயுரிய பார்வையோடு தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பாலா: கவிதை வார்த்தைகளைக்குறைத்தால்தான் அதற்கு சரியான effect கிடைக்கும். வார்த்தைகள் கொடுக்கிற விதத்தில்தான்.அதற்குச்சரியான வடிவமும் கிடைக்கிறது. மொழியின் அருமை என்பது