பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்கிறதே... நிறைய வார்த்தைகள், உணர்ச்சிகரமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் இல்லை. சரியான வார்த்தைகளை, கவிதைக்குப் பொருத்தி அதற்கு மேலும் வலுவூட்டக்கூடிய Proper வார்த்தைகளைத் தேர்ந்து கொள்வதில்தான் அருமை என்பதே இருக்கிறது. - மொழியைப் பயன்படுத்துகிறதிலும் கூட இரண்டு பிரிவினர் இருக்கிறார்கள். மரபான சொல் வளமுள்ள கவிஞர்கள் ஒரு பிரிவாகவும், இதை Purity செய்து வார்த்தைகளை கவிதையில் colourless 4,5 உபயோகப் படுத்த வேண்டும் என்று இன்னொரு பிரிவினர். ‘ழ’ குரூப்காரர்கள் அந்த வகை. வார்த்தைகளில் வண்ணமே இருக்கக்கூடாது. ரொம்பவும்.Plain ஆக Dry ஆக இருக்கவேண்டும் என்கிற வகை. இதன் தீவிரத்தன்மைAnti-poetic வகை எனலாம். மீரா: அதாவது வார்த்தைகளில் இருக்கக்கூடிய கொழுப்புச்சத்தை எடுத்துவிட வேண்டும் அப்படித்தானே! - பாலா: புதுமொழி என்பதைச் வறட்டுத்தனமான , மொழி என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். மீரா: நிலவைப் பற்றிப்பாடிய சி.மணி ரொம்பவும் Plain ஆகப்பாடியிருக்கிறார். இதில்Romanic தனமான கருத்து இல்லாமலிருந்தாலும் கவிதையின் எளிமையே அதற்கு வலுவூட்டிவிடுகிறது. 65