பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவில்லையே என்று கவலைப்படுவாள். இப்படி எல்லோரும் சொல்லிச் சொல்லி அவள் வேலை தேடி வீதியில் போகும்போது எல்லோரும் அவளைப் பார்க்கிறார்கள். இதனை எனனை உணர்ந்தேன் தெருமலமாய்." என்கிறார் பாலகுமாரன். இந்த உணர்வைப் பிரதிபலிப்பாள். மலம் என்கிற சொல்லையே பயன்படுத்தக்கூடாது என்பது மரபு. இதனை மீறியவர் பாரதிதாசன். . 'மலம் மூடத்தான் மலர் பறித்தேனெனில் குளிர்மலர்ச்சோலை கோவென்றழாதா என்பார் அவர் இந்த வார்த்தையை அங்கே பயன்படுத்துகிற பொழுது அதிலுள்ள கோபம்தான் நமக்குத் தெரிகிறதே தவிர, அந்த வார்த்தையின் அருவருப்பு நம்மை அண்டவேயில்லை. இதுமாதிரி பாலகுமாரன் என்னை உணர்ந்தேன் தெருமலமாய்' என்கிறபோது அந்தப் பெண்ணின் உணர்வுக்கு இதைவிடச்சிறந்த வேறு சொல்லைப் பயன்படுத்தவே முடியாது. ஆனால் இதையே ரொம்பவும் மிடுக்காகவும், ஒரு அலங்காரத் தன்மையோடும் சொல்லிவிடுகிறபோது, சொல்லப்படுகிற கருத்தின் உண்மையான உணர்வு அடிபட்டுப் போய்விடுகிறது. இரா.வே. பாலகுமாரன், ஞானகூத்தன், சி.மணி போன்றவர் களெல்லாம் மொழியின் அருமையில்லாமல், தமிழ்மொழிப் பரிச்சயம், மரபு Εξ