பக்கம்:கவிதை நூல்கள்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

உலகமெலாங் களிகூர ஒளிர் தமிழி னியல்வளர
இலகுதமி மிசைவழக்கே எம்மருங்கும் வளர்ந்தோங்கப்
புலவருள மகிழ்கூர யாழ்நூல்செய் புலவர்பிரான்
மலரடியென் சென்னியினு மனத்தகத்தும் மலர்ந்துளவால்.

வேறு

ஒளிர்பரிதி யியக்கத்தாம் கிதர்ந்துதிர்ந்த கோர்பகுதி யுலக மாகி
மிளிர்மலையாய் விளங்கியவர் நாள் கொட்டே நாகரிக விறலான் மிக்குக்
குளிர்கடலி னிடைமிளிர்ந்த குமரிகிலப் பெருமக்கள் குறிப்பிற் றேன்றுந்
தெளிதமிழி னியல்புணர்ந்தார் தெளிவுநிலை பெற்ரறோங்கிக் திகழ்ந்தா என்றே.


உள்ளத்தாற் பொருளியல்பை யுணர்த்துமொழி யியலென்பர், உணர்ச்சி வேக
வெள்ளத்தா லெவ்வுயிரும் மகிழ்ந்திசைய ஓசைநலம் விளங்க வின் பங்
கொள்ளச்செய் உரைத்திறத்தாற் குலவுமொழி யிசையென்பர், குறிக்க செய்கை
விள்ளத்தா னதுவாகப் பயிற்றுமொழி நாடகமா விரிப்ப ராலோ.


பெருகாரை பெருங்குருகு முதலியகல் லிசைநூல்கள், பேணத் தக்க
பொருளார்ந்த தமிழ்ப்பாகம் முறுவல்செயிற் றியங்குனரால் சயந்த மென்னுந்
திருவார்ந்த நாடகச்செந் தமிழ்நால்க ளானவெலாம் திகழ்தென் னாட்டில்
வருவார்போ வார்தமிழி னியல்பனைத்து முனர்க்குமனம் மகிழ்ந்தார் மன்னுே.


அசைவில்செழுந் தமிழ்வழக்கே குமரிமுத் லிமயம்வரை யமைந்த வங்காள்
திசைமுழுதும் மெய்யறிவு சிறந்கோங்கத் தமிழ்ப்புலவர் திகழ்த்தார், தங்கள்
இசைநிலையை வளர்த்திட்டார், யாழ்குழலென் றெத்துணையோ கருவி கண்டார்,
வசையொழிய வளம்பெருக அறம்வளர்த்தே தமிழர்கிலை மாண்புங் கண்டார்.


புனத்தகத்தே பொழிலகத்தே புறவார்கண் பணயகத்தே புன்னைக் கானல்
கனத்ததிரை தவழ்மருங்கே கான்யாற்றே பருஞ்சுமத்தே காத வின்ப மனத்தகத்தே மகிழ்சுரக்கும் மனேயகத்தே மன்றிடத்தே மற்று மாங்கே இனித்ததமி ழிசைபரவு மியல்கண்டார் இன்பநிலை பெங்குங் கண்டார்.


மூவாத விளமைமிளிர் முத்தமிழி னியல்புணா முன்னேர் கந்த தாவாத தமிழ்நால்க ளெத்துணையோ தென் மதுரைத் தலைச்சங் கத்தே, பாவார்ந்த கபாடபுரச் சங்கத்தே, கூடலிலே பயின்ற யாவும் ஒவாத கடல்கோளால் மேவார்செய் சழக்கதன லொழிந்த வந்தோ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_நூல்கள்.pdf/3&oldid=1252043" இலிருந்து மீள்விக்கப்பட்டது