பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகும் உண்மையும் 89 யும், பொதுத் தகுதியும், இலக்கியப் பயிற்சியும் போதா. எனவே, உயர்நிலைப் பள்ளிகளில்தான் கவிதை யுண்மையை வற்புறுத்த வேண்டும். உயர்நிலைப் பள்ளிகளிலும் அத்தகைய சூழ்நிலை சரியாக அமைவதில்லை. சில யாண்டுகளாக அவசரமாக நிறுவப் பெற்ற பள்ளிகளில் கட்டடம், இருக்கை வசதிகள் முதலியவை இன்னும் சரியாக அமையவில்லை. அழுக்குப்படிந்த அறைகள், ஒழுக்குள்ள கூரைகள், புழுதிபடிந்த தரைகள், உடைந்த பெஞ்சு கள், இங்கொன்றும் அங்கொன்றுமாக அமைந்த வகுப்பறைகள் -இச்சூழ்நிலையில் ஆசிரியர்கள் அழகைப்பற்றி எங்ங்னம் வற் புறுத்த முடியும்? அன்றியும், நம் நாட்டில் ஏழைக் குழந்தைகள் அதிகம். அதிலும் நாட்டுப்புறங்களில் கிழிந்த ஆடையுடனும், உடைந்த கற்பலகையுடனும், எண்ணெயே காணாத தலையுட னும் பள்ளிக்குவருகின்றவர்கள் எத்தனைபேர்? பாலம் வியத்தல் என்ற எண்ணத்தை இவர்களிடம் எங்ங்ணம் வளர்ப்பது? இங்குத் தான் ஆசிரியரின் பணி சிறக்கவேண்டும். இதற்குப் பாதிரிமாரின்’ மனப்பான் மை வேண்டும். நம் நாட்டுத் தொண்டர்களிடம் இம் மனப்பான்மை இன்னும் சரியாக அமையவில்லை. புறக்கூறுகளை மறந்துவிட்டு, இக்குழந்தைகளிடம் சரியான முறையில் கவிதை களைக் கற்பித்தால், அவர்கள் முகம் மலர்ச்சி பெறுவதை காண லாம்! கண்களில் புத்தொளி வீசுவதைப் பார்க்கலாம். இதுவே கவிதை கற்பிக்கும் ஆசிரியரின் உண்மையான பணி; அருட்பணி. இத்தகைய பிற்போக்கான குழவிகட்குப் பல்வேறு வாய்ப்பு கள் கிடைப்பதில்லை. நல்லாசிரியர் வாய்ப்பதும் இத்தகைய வாய்ப்புகளில் ஒன்று. சிறந்த ஆசிரியரின் ஆளுமையே அவர்கள் வாழ்வை வளமாக்கவேண்டும். அருட்பணி புரியும் ஆசிரியர்களை ஒரு நாளும் மறக்கவே மாட்டார்கள் அவர்கள். இயற்கையில் தோய்ந்து கிடக்கும் அழகு: இயற்கையில் அழகு தோய்ந்து கிடக்கின்றது; அது யாண்டும் நீக்கமற நிறைந்து கிடக் கின்றது. கைபுனைந் தியற்றா இயற்கையழகில் கருத்தைச் செலுத்திய ஒருவர் அதனுடன் புணரும்தோறும் புணருந்தொறும் அவருள்ளத்துள் சொலற்கரிய இன்பம் கிளர்ந்தெழுவதை அறிய லாம். இந்த அழகிய உலகினை அண்ணாந்து நோக்கினால், கீழும் மேலும், சுற்றும் முற்றும், எங்கும் அழகு சொரிந்து கொண்டிருப் பதைக் காணலாம். அழகிய நீலப்படாத்தின் விரிவில் நித்திலந் தூவினாலென வானத்தினுாருஞ் செவ்விய அழகை என்னென்று வருணிப்பது? ஞாயிற்றின் ஒளியை என்னென்று நவில்வது? திங் களின் நிலவை என்னென்று செப்புவது? கோள்களின் மின்னலை 尋ー12