பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&8 கவிதை பயிற்றும் முறை அமைத்த சொற்கோவில்களில்தான் பல அற்புதக் காட்சிகளைக் காணமுடியும். ஆசிரியர்களிடம் கவிதையதுபவம் அமைந்தால் தான் மாணாக்கர்களிடமும் அது நன்கு அமையும். கல்வியாளர் கள் இந்த உண்மையை நன்கு உணர வேண்டும். ஒரு நாட்டின் உயர்வையும், தாழ்வையும் அந்நாட்டில் நிலவும் மொழியிலமைந்த கவிதைகளின் அளவினைக்கொண்டே அளவிடலாம் என்று ஒரு பேரறிஞர் கூறியுள்ளதை ஈண்டு நாம் சிந்தித்துப் பார்ப்போமாக அழகின் மூலமே உண்மையைப் பெறுதல்: ஏனைய கலைகளைப் போலவே, கவிதையிலும் அழகின் மூலமாகவே உண்மைய்ை நாடவேண்டும் என்று முன்னோர் இயலில் கூறினோமன்றோ ?, ஒரு கவிதையின் அழகை நாம் துய்க்க முடியாவிட்டால் அது காட்டும் உ ண் ைம யு ம் நமக்குப் புலனாகாது. எனவே குழந்தை கவிதையை இயல்பான முறையில் அணுகுவதே சரி யான முறையாகும். சிறுவயதில் குழந்தை தோட்டத்தில் அழகில் நாட்டமின்றியே மலர்களைக் கொய்வதுபோலவே, அது பாடல்களைப் படித்தல் வேண்டும். நாளடைவில் சிறுகச் சிறுகக் கவிதையிலுள்ள அழகு அதற்குத் தட்டுப்படும். கவிதையின் அழகைக் குழந்தை நுகரத் தொடங்கும் நிலையில் கவிதையின் உண்மையைச் சிறிது சிறிதாகக் காணக் செய்யலாம். அழகும் உண்மையும் அநுபவத்தால்தான் பெறக்கூடியவை. ஒரு குழந்தை கனவு நிலையில்தான் கவிதையை அநுபவிக்கக் கூடும் எ ன் றி ரு ந் தா ல், அது கனவில் திளைக்கட்டும் என்று விட்டுவிடவேண்டும். அதற்கு வாய்ப்புகளும் தருதல் வேண்டும். தொடக்க நிலையில் எந்தப் புதிய பாடத்திற்கும் தனிக் கவனம் தேவை என்பதை நாம் அறிவோம்; இது எல்லோருக்கும் ஒப்ப முடிந்ததோர் உண்மை. அன்றியும், முதல் ஏற்பாடுகள் கவனத்துடனும் செய்யப்பெறுதல் வேண்டும். இல்லாவிட்டால் அவை தவறான நெறியில் கொண்டுய்ப்ப துடன், தவறாகக் கற்கும் பழக்கங்களையும் உண்டாக்கி விடு கின்றன. நற் பழக்கங்கள் அமையவேண்டுமாயின், இவை முதலில் மறக்கப்பெறல் வேண்டும். எனவே, தொடக்க நிலைப் பள்ளிகளில் குழந்தைகட்குத் தனிக்கவனம் மிகவும் இன்றியமை யாதது என்றாகின்றது. இன்றைய நிலையில், குழந்தைகளை ஆட்டுமந்தையைப்போல் அடைத்துவைத்திருக்கும் நிலையில், தனிக் கவனம் எங்ங்னம் சாத்தியப்படும்? தவிர, இச் சூழ்நிலை யில் உண்மை அழகில்தான் காணப்பெறும்’ என்று சொல்வது அரிது. மேலும், அங்குப் பணியாற்றும் ஆசிரியர்களின் அறிவுநிலை 11. கவிதையநுபவம் (முதற்பதிப்பு}-பக்கம் 265.