பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகும் உண்மையும் 87 கல்வி கற்பிப்பதைவிட-ஞானக்கண் திறந்து வைப்பதைவிடபுனிதமான செயல் வேறென்ன இருக்கமுடியும்? ஆனால், இ ைத நம்பிக்கையற்ற முறையில் மிக முக்கியமானதொன்றாக மேற் கொண்டால், பள்ளியில் மகிழ்ச்சி தரும் சூழ்நிலையை நிலவச் செய்ய முடியுமா? அவலநிலையான சூழ்நிலையையன்றோ உண் டாக்கிவிடும்? இதற்குக் காரணம் என்ன? உண்மையான சமயம்’ வாழ்க்கையின் நல்ல கூறுகளில்தான் வாழும். இன்ப நிலையிலும் துன்பநிலையிலும், நகையிலும் அழுகையிலும், பெரிய விஷயங் களிலும் சிறிய விஷயங்களிலும் சமயம் இல்லையெனின், அ ஃ து அதன் தளர்ச்சியைத்தான் காட்டுகின்றது. சிறுவர்களின் மகிழ்ச்சி யான எக்களிப்பைக் குலைக்கக்கூடிய சமயமாயிருப்பின் அது கடியப்பெறக்கூடிய தொன்று. அங்ங்ணமே நம்முடைய கற்பித்த லும் மாணாக்கர்களின் மகிழ்ச்சியைக் குலைப்பதாயிருப்பின், அதையும் புறக்கணிக்கப்படுவதொன்றாகவே கருதவேண்டும். ஆசிரியர் தம்முடைய பணியில் ஒரு குறிக்கோளைக் கொண்டால் தாம் மேற்கொண்ட வேலையில் மகிழ்ச்சியைக் கண்டால், மாணாக்கர்களும் அதனைக் காண்பர் என்பது ஒருதலை. நல்ல மனநிலை இல்லாவிடில், சரியான மனப்போக்கு ஆசிரியரிடம் அமையாவிடில்,அவர் செய்யும் பணி முழுவதும் பாழாம். கவிதை பயிற்றலிலும் இத்தகையதொரு மனப்பான்மை நிலவவேண்டு மென்பதே இந் நூலாசிரியரின் விருப்பம்; நோக்கம். உண்மை யான சில தமிழாசிரியர்களிடம் இவ்வித மனப்போக்கைக் காணலாம். உண்மையான சமயப்பற்றுள்ளவர்களிடம் எங்ங்ணம் உண்மையான சமயவாழ்க்கை அமைகின்றதோ, அங்ங்னமே உண்மையான தமிழாசிரியரிடம் கவிதையுண்மை நிலவுகின்றது. கவிதையுண்மையிலுள்ள நம்பிக்கை அவர்களை ஆராய்ச்சியில் உய்ப்பதில்லை; அநுபவத்தில் கொண்டு செலுத்துகின்றது. அவர் கள் கவிதையில் உண்மையையும் அழகையுமே காண்பர். கவிதை யைப் படிக்கும்பொழுது எல்லையற்ற இன்பத்தை அடைவர். கவிதையைப்பற்றிய நம்முடைய நம்பிக்கையில் ஐயம் எழுமாயின், அதைப்பற்றி ஆராய்வதில் பயனில்லை. நம்முடைய நம்பிக்கை வாதத்தின்மீது கட்டப்பெற்றதன்று: அஃது அநுபவத்தின்மீது எழுந்ததாகும். அந்த நம்பிக்கைக் குலைவினைப் போக்கவேண்டு மானால், மேலும் கவிதையைப் படிக்கவேண்டும். கம்பனை நாம் விரும்பினால், நேரடியாகக் கம்பனில் நுழைந்துவிடவேண்டும்; அவன் கவிதையில் திளைக்க வேண்டும். கம்பனைப்பற்றிய ஆராய்ச்சி தூல்களைப் படிப்பதால், கவிதையை அநுபவிக்க முடியாது. செயங்கொண்டானையோ சேக்கிழாரையோ,திருத்தக்க தேவரையோ நாம் பார்க்க வேண்டுமானால், நேரடியாக ಆನ್ಲಿಗೆ ளுடைய கலைக்கோவில்களில் புகுந் துவிடவேண்டும். அவர்கள்